பெண்ணடிமையும் ஆணாதிக்கமும் – தோழர் ஓவியா

அரசியல் கற்போம்-5

Advertisements

அரசியல் வகுப்பு-6

அரசியல் வகுப்பு-6

தோழர் தமிழரசனும் தமிழ்த்தேசியமும்-தோழர் தமிழ்நேயன்

நாள்:20.05.12 ஞாயிற்றுக்கிழமை

நேரம்:மாலை 4.00 மணி

இடம்: 6/28, தமிழ்க்குடில், புதுத்தெரு, கண்ணமாப்பேட்டை, தியாகராய நகர், சென்னை.

 

தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் நிலை – கு.கண்ணன்

 

 

தொடர்ந்து தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க போன்ற கட்சிகளுக்கு பெரிய வேறுபாடுகள் இல்லை. காங்கிரஸ், பா.ஜ.க இரண்டும் மதவாத மற்றும் வர்ணசிரம கொள்கைகளை கொண்டிருந்தப்போதிலும் மாநில கட்சிகளான தி.மு.க மற்றும் அதிமுக போன்ற கட்சிகளில் அத்தகைய மதவாத, வர்ணாசிரம கொள்கைகள் நேரடியாக இல்லையென்றாலும் சாதிய ஓடுக்குமுறைகள் தலைவிரித்தாடுகின்றன.

 ம.தி.மு.க சரியான அரசியல் தலைமையில்லாததால் தட்டுத்தடுமாறி சரியான நேரத்தில் சரியான வேலையை செய்ய முடியாமல் செல்வாக்கிழந்துள்ளது. பா.ம.க சந்தர்பவாத அரசியலில் சிக்கி சின்னபின்னமாகிவிட்டது. தாழ்த்தப்பட்டவர்களின் உரிமையை மீட்டெடுக்கப் புறப்பட்ட இயக்கம் வி.சி, ஆனால் அதுவே இன்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானதாக கருதப்படும் நிலையில் உள்ளது.

 அரசியல் கட்சிகளின் நிலைமை இப்படி இருக்க தமிழர்களுக்காக போராடுகிறோம் என சொல்லிக்கொண்டிருக்கும் அத்துனை தமிழ்தேசிய அமைப்புகளும் தனித்தனி சித்தாந்தத்தை கடைப்பிடித்து வருகின்றதோடு வரட்டு பிடிவாதம்பேசி தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றன.

 இவர்களின் இருப்பு சமுதாயத்தில் இவ்வாறாக உள்ள நிலையில், பெரும்பான்மையான மக்கள் எப்படி உள்ளார்கள் என்றால். தமிழன் என்ற உணர்வு கிஞ்சிதம் அற்ற தன்னை ஒரு இந்திய தேசிய பற்றாளனாகவும், இந்திய தேசியத்தை தாங்கி பிடிக்கக்கூடியவர்களாவும் காட்டிக்கொள்வதுடன், பார்ப்பனியப் பண்பாட்டை ஒட்டுமொத்த இந்தியாவின் பண்பாடாக கருதிக்கொண்டு, அந்த பண்பாட்டினை கடைப்பிடிக்கவும் தங்களையும் பார்ப்பனர்கள் போல காட்டிக்கொள்ளவும் சந்தர்ப்பங்களை எதிர் நோக்கியுள்ளார்கள். ஆங்கிலத்திலே கல்வி கற்கிறார்கள், ஆனால் சிந்திப்பதோ தாய்மொழியில். நம் காலத்திலே வாழ்ந்துக்கொண்டிருக்கும் சின்னஞ்சிறுசுகள் கூட தாய்மொழியிலே பேசுவதைக் கேவலமான விடயமாகவே கருதுகிறார்கள், அவர்களுக்கு தாய்மொழியிலே எழுதவும், எழுத்துக்கூட்டி படிக்கத்தெரியாது என்பதும் இங்கு நாம் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.  

அன்னியர்களும், வெள்ளையர்களும் சுரண்டியதுப்போக மீதமுள்ள நம் தேசிய வளங்களை இந்தியர் என்ற பெயரிலே வடநாட்டவரும் இந்திய ஆளும் வர்கத்தைச்சேர்ந்த ஆதிக்க வர்க்கங்களும், மதவாத சக்திகளும் இந்திய நிலப்பரப்பில் தன்னை இந்தியன் என்று பறைச்சாற்றிக்கொண்டு கணக்கில்லா சொத்துக்களை குவித்துக்கொண்டிருக்கும் இந்திய ஏகாதிபத்தியவாதிகளும், முதலாளிகளும் நம் தாய்மண்ணை தொடர்ந்து நமக்கு தெரிந்தும் நமக்கு தெரியாமலும் கொள்ளை அடித்துக் கொண்டிருப்பதை நாம் உணர்ந்தும் உணராதநிலையிலே இருக்கின்றோம்.

 திராவிடநாடு, தனித்தமிழ்நாடு, இந்தி எதிர்ப்பு, மொழிவாரி மாநிலம், பெண்ணுரிமை, இடஒதுக்கீடு, தன்மானம், சுயமரியாதை, பகுத்தறிவு கருத்துகள், சாதி மத எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு, தனியார்மய எதிர்ப்பு மற்றும் பண்ணை(ஜமீந்தார்) எதிர்ப்பு, விவசாயிக்கான உரிமைப்போராட்டம் இப்படி பல்வேறு கட்டங்களில் வரலாற்றில் தமிழர்கள் தங்களுடைய அடையாளங்களை தவறாமல் பதிவுசெய்தவர்கள். இந்தப் போராட்டங்களையே மூலதனமாக மாற்றி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளே தமிழர்களின் இன்றைய நிலைக்குப் பெரிதும் காரணமாக இருக்கின்றார்கள். அதே வேலையில் தமிழ்நாட்டில் தமிழ்தேசியம் அல்லது தமிழர்களின் உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கும் அமைப்புகளும் சரியான நேரத்திலே, சரியான வேலையை செய்யத்தவறியதே முதன்மைக்காரணமாகவும் இங்கு நாம் பார்க்கவேண்டியுள்ளது. (உதரணமாக தமிழக அரசை வேலைவாங்கும் ஆற்றல் அன்று பெரியாருக்கு இருந்தது, அவருக்குப்பின் அதுப்போன்ற ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததாக கூட நாம் எங்கும் காணமுடியாது)

தமிழ்தேசிய வளங்களைப் காப்பது, மண், நீர்(கடல், ஏரிகள் மற்றும் ஆறுகள்), காடுகள், தாவரங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் உயிரினங்கள்(கால்நடைகள்)பெரும்பான்மையான வளங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலே தான் உள்ளது. அதிலிருந்து பெறக்கூடிய வருமானங்கள் எல்லாம் மைய அரசுக்கு சென்றுக்கொண்டிருக்கின்ற அவலத்தை நாம் கண்டும் கணாமல் இருக்கின்றோம். மேலும் தமிழ்நாட்டின் தேசிய வளங்கள் பன்நாட்டு நிறுவனங்களுக்கு மலிவான விலைக்கு விற்கப்பட்டுகொண்டிருப்பதையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம். ஏன் உச்சநீதிமன்றத்தீர்பை அவமதித்த அண்டைமாநிலங்களை தட்டிக்கேட்க முடியாத நிலையிலே தமிழக அரசு இன்றும் உள்ளது.

அப்படி என்றால் நாம் எதனை கொண்டு இவற்றையெல்லாம் தடுக்கப்போகிறோம்.

 நாம் இந்தியர்கள் அல்ல, நாம் 64 ஆண்டுகளாத்தான் இந்தியன் என்ற பட்டம் சுமந்துக்கொண்டிருக்கின்றோம் என கூச்சல் இட்டால் போதுமா?எப்படி தேசியம் என்ற சொல் 18 ஆம் நூற்றாண்டிலே உருவாகி அதன் பின்பு இயந்திரபுரட்சியால் தொழிற்புரட்சி உருவாகி வர்க்கப்போராட்டங்களாக மாறி அதன் பின்பு பல்வேறு  தேசிய இனங்களுக்கான நாடுகள்  உலகில் தோன்றியதோ, அதுபோலவே வரலாற்றிப்போக்கிலே தமிழ்நாடும் தனிநாடாகும் என காத்திருக்கப்போகிறோமா?

 அல்லது தமிழ்நாட்டில் தமிழ்தேசியத் தேவையை ஒட்டி நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் கூர்மழிந்த ஜனநாயக போராட்டத்தையும் மட்டும்  தொடர்ந்துக்கொண்டு இருக்க போகிறோமோ  அல்லது மாற்றுப்போராட்ட வடிவங்களையும் நாம் கையில் ஏந்தப்போகிறோமா?

மக்களை திரட்டி ,மக்கள் போராட்டங்கள் பெருமளவில் நடத்துவதன் மூலமாகவே மாற்றங்களை பெறமுடியும் .இன்று கூடங்குளம் மக்கள் போராட்டம் ,முல்லை பெரியாருக்காக மக்கள் நடத்தும் போராட்டம் ஒரு புதிய வரலாற்றினை எழுதுகின்றன . 

நாமோ எப்போதும் போல யாரவது வந்து நம்மை காப்பாற்றி விடமாட்டார்களா ?என்றபடி இன்னும் கனவுலகை விட்டு வெளியே வரமுடியாமல் ,காலத்தை கடத்திக்கொண்டு ….யாரும் சரியில்லை என்று விமர்சனம் செய்து கொண்டு ,அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு ……………….

கு.கண்ணன்

புனித அணு உலைகளை காசியில் வையுங்கள்!

 

தூய மின்சாரம், சுத்தமான மின்சாரம், மாசற்ற மின்சாரம் இப்படி பிதற்றிக்கொண்டிருக்கும் ஆசாமிகளுக்கு நாம் உணர்த்த வேண்டியது என்னவென்றால் எந்த மின்சாரமாக இருந்தாலும் தொட்டால் நிச்சயம் “ஷாக்” அடிக்கும் என்பதே. “டயனமேட்” என்ற வெடிகுண்டை கண்டு பிடித்த நோபல் என்ற விஞ்ஞானி, அந்த காரியத்தை செய்ததற்காக மிகவும் மனம் வருந்தி அவருடைய எல்லா சொத்துக்களையும் ஒரு அறக்கட்டளைக்கு கொடுத்துவிட்டு ஆளில்லாத தீவிற்கு சென்று தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

“கருத்து முதல்வாத சிந்தனையில் இருந்து பொருள்முதல்வாத சிந்தனை வளர்ச்சி மாற்றத்திற்கு விஞ்ஞானிகளின் பங்கு கனிசமானதாக இருந்தாலும், அன்று பொருள்முதல்வாத சிந்தனை முறையை கடைப்பிடித்த விஞ்ஞானனிகள் கூட கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாகவும், தன்னுடைய கண்டுபிடிப்பே அறுதியும், இறுதியுமானது என்றும் அடம்பிடித்தார்கள். உலகம் உருண்டை எனச்சொன்ன கலிலியோவின் கூற்றையும் அவர்கள் ஏற்கவில்லை, அவரை கல்லால் அடித்து கொன்றது இந்த உலகம். அன்று இருந்த மக்கள் உலகம் தட்டையானது, வட்ட வடிவமானது எனக்கருதினார்கள். பொருளாதாரப் வளர்ச்சிப்பாதையிலும், வரலாற்று இயங்ககியல் பாதையிலும் பயணித்த மக்கள்  மெதுவாகத்தான் இயங்கியல் பொருள்முதல்வாத வளர்ச்சியை புரிந்துக்கொண்டார்கள்.

ஆனால் அப்துல் கலாமோ அவர் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என அடம்பிடிக்கிறார். இவர் இந்தியாவின் ஜானதிபதியாக இருந்தபோதுதான் தூக்குத்தண்டனை கைதியான சனந்த்ஜெ சாட்டர்ஜீயின் கருணை மனுவினை தள்ளுப்படி செய்தார். அதனை ஒட்டி எழுந்த பலத்த எதிர்ப்பின் காரணமாகத்தான், அவருடை பணிக்காலத்தில் எந்த தூக்கையும் நிறைவேற்றமாட்டேன் எனக்கூறி தப்பித்துக்கொண்டார். அன்றே நாம் அவர் தமிழர் அல்ல என உணர்ந்தோம். 2009 ல் 1 1/2 லட்சம் ஈழத்தமிழர்கள் இறந்தப்போதுக்கூட சிறு வருத்தம் கூட தெரிவிக்காத அப்துல்கலாம் நிச்சயம் இந்தியாவின் கடைசி குடிமகனாக கூட இருக்கமுடியாது என்பதே திண்ணம். ஏன் அவர் ஒரு நல்ல மனித நேயம் கொண்ட மனிதராக கூட இருக்கமுடியாது என்பது உறுதி. ஏனென்றால் அவர் இதுவரை கண்டுபிடித்ததெல்லாம் உயிர்கொல்லும் ஆயுதங்கள் தானே.

“பனைமரத்தில் தேள் கொட்டினால், தென்னை மரத்தில் நறி கட்டும்” என்பார்கள், என்றோ இவர் அமெரிக்கா போன போது இவரை பரிசோதனை செய்ததற்காக அமெரிக்கா ஏற்கனவே மன்னிப்புக் கேட்டுவிட்டது. இப்போது மீண்டும் அமெரிக்கா இவரிடம் மன்னிப்புக் கேட்கிறது, அதற்கு இவரும் பெருந்தன்மையாக “மறப்போம், மன்னிப்போம்” எனச்சொல்லி இருக்கிறார். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் எங்களைப் பார்த்தால் அந்த அளவுக்கு கேணப்பயலுங்களா தெரியுதா அமெரிக்கா மாமா அப்துல் கலாம் அவர்களே.

இடிந்தகரை மக்களை சந்திக்க தைரியம் இல்லாத இந்தியாவின் மூத்த குடிமகன், கூடங்குள அணு உலையை 45 நிமிடம் ஆய்வு செய்து 40 பக்க அறிக்கையை ஊடகங்களுக்கு வழங்கியதிலிருந்தே அவரின் நேர்மையை வெட்ட வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. இந்தியாவிலே அதிநவீன பாதுக்காப்பு வாய்ந்தது கூடங்குள அணு உலைத்தானாம். அப்படி என்றால் மற்ற அணு உலைகள் எல்லாம் பாதுகாப்பு குறைவானது என்று நீங்களே ஒப்புக்கொள்கிறீக்களா?. ஏன் சமிபத்தில் “ஹோண்டா” நிறுவனம் அதிசிறந்த “ரோபோ”(இயந்திரமனிதனை) கண்டுபிடித்தது எதற்க்காக தெரியுமா? அணு உலைகளில் ஏற்படும் கசிவினை அடைக்கத்தான்,  அந்த ஜப்பான்காரனுக்கு தெரியவில்லை, இந்தியாவின் மூத்த குடிமகன் அப்துல் கலாமிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம் என்று.

போபால் விஷ வாயு கசிவு விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றும் நீதி கிடைக்கவில்லை, அவர்கள் என்ன மாடி வீட்டு மைனர்களா? அல்லது பெரும் முதலாளிகளா? உச்சநீதிமன்றம்(உச்சிகுடுமிமன்றம்) சென்று நீதிகேட்க. சில பூணூல்களும் மற்றும் இந்துத்துவா சக்திகளும் மற்றும் காங்கிரஸ் என்னும் விபாச்சார கட்சியும் சேர்ந்துக் கொண்டு மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் குழப்பங்களை தீர்த்து வைக்க வக்கில்லாத வக்கிரம புத்தி கொண்டவர்கள் தொடர்ந்து மக்கள் போராடங்களை கொச்சைப்படுத்தும் நாசவேலை இது என்பதனை நாம் அறியாதவர்கள் அல்ல.

அன்று தேவதாசி சட்டத்தை ஒழிக்கப்போராடிய முத்துலட்சுமி அம்மையார், சத்தியமூர்த்தி பாப்பானைப் பார்த்து கேட்ட கேள்விதான் இப்போது ஞாபகத்திற்கு வருகிறது. தேவதாசி சட்டம் கட்டாயம் இருக்க வேண்டும் என சத்தியமூர்த்தி நீதி மன்றத்தில் கூறினார், உடனே முத்துலட்சுமி அம்மையார் குறிக்கிட்டு, அப்படியென்றால் உங்கள் வீட்டு பெண்களை பொட்டுகட்டிவிட அனுப்புங்கள், இந்த தேவதாசி முறை இருக்கட்டும் என்றார். அதன் பின்பு வாயை மூடியவர் தான் மறுபடி அதனைப் பற்றி பேசவே இல்லை. 

நாங்கள் கேட்கிறோம், மாமா நாராயணசாமி அவர்களே, புதுச்சேரியும் கல்பாக்கமும் ரொம்ப தூரம் இல்லையே. உங்களுடைய வீட்டை நீங்க கல்பாக்கதுக்கு மாற்ற உங்களுக்கு துணிச்சல் இருக்கா நாராயணசாமி மாமா அவர்களே?
காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மம்தாவும் தான் அணு உலை வேண்டாம்னு சொல்றாங்கா, அப்ப அவங்களுக்கும் எந்த வெளிநாட்டிலிருந்து பணம் வருதுன்னு ஏன் கேட்கம இருக்கீங்க நாராயணசாமி மாமா அவர்களே.

தீர்க்க தரிசிப்போல பேசிய பூணூல் போடாத மாமா அப்துல் கலாமுக்கு புடிச்ச உணவு தயிரும் மோரும் தான்னு நம்ம மக்ககுக்கு தெரியுமான்னு தெரியல. அப்துல் கலாமே சொல்லிட்டாரு, என்னய்யா அப்துல் கலாம் என்ன மாமனிதரா என்ன? இன்றும் இந்தியாவில் 60 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கிறார்கள் என்பது தெரியாதா? இந்த மக்களுக்காக ஏன் இவர் கழிவரை பூங்கா அமைக்க கூடாது. ஏனென்றால் கழிவரையில் எப்படி அணுகுண்டு தயாரிக்க முடியும் அல்லது அமெரிக்காவுக்கு இதில் என்ன லாபம். அணு தொழில்நுட்ப ஒப்பந்த திட்டத்தில் கையெழுத்துப்போட அமெரிக்கா இந்திய மந்திரிகளுக்கு வழங்கிய பணத்திற்கும், அமெரிக்காவுக்கு தரகு வேலை செய்து கொண்டிருக்கும்அப்துல் கலாமுக்கும் தொடர்பு உண்டேன சில ஆங்கில பத்திரிக்கைகள் எழுதிக்கொண்டிருக்கின்றன. அணுசக்தி பூங்கா, நல்ல மருத்துவமனை, நல்ல பள்ளி, அந்தப் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு இப்படி திட்டங்களை வாரி வழங்கும் தாங்கள், ஏன் எல்லா கிராமங்களுக்கும் 200 கோடி பணம் ஒதுக்க வில்லை, அப்படி இல்லையென்றால் கூட இந்தியாவில் அணு உலை அமைந்துள்ள மற்ற பகுதிகளுக்கு ஏன் வழங்க கூடாது. இந்தியா மக்களாட்சி கொண்ட பெரிய நாடு என தம்பட்டம் அடிக்கும் இந்த திருநாட்டில் எப்படி இப்படிப்பட்ட பெரியவாள்கள் மக்களை கலந்தாலோசிக்காமல் அல்லது மக்கள் பிரதிநிதிகளை கலந்தாலோசிக்காமல் இப்படிப்பட்ட பெரிய திட்டங்களை உடனக்குடன் வழங்க முடிகிறது.

வெள்ளைக்காரன் நாட்டிற்குள் நுழையும் முன் நம் முன்னோர்கள் சொல்வார்கள், 
“பைபுள் வரும் முன்னே,
ஆர்மி வரும் பின்னே” என்று,
அதுப்போல இன்று அப்துல்கலாம் வந்திருக்கிறார், நாளை நிச்சயம் கூடங்குளத்திற்கு ஆர்மி மக்களின் போராட்டத்தை ஒடுக்க நிச்சயம் வரும் என்பதை நாங்கள் அறியாதவர்கள் அல்ல.

அரசு என்பதே குண்டாந்தடியை வைத்துத்தானே நடந்துக்கொண்டிருக்கிறது, இந்த நவின உலகமயமாக்கல் காலத்திலே அரச வன்முறையொடு, அரச விளம்பரம், பிரச்சாரம் மற்றும் கவர்ச்சிகர திட்டங்கள் ஊடகங்கள், பன்னாட்டு நிறுவனங்களை கொண்டு தொடர்ந்து நம்மை நசுக்கி கொண்டு வருகிறது, நம் மக்களை இந்த அரசுகள் மந்தைகளாக மாற்றிவிட்டன. இயற்கையை நாசப்படுத்திக்கொண்டிருக்கும் முதலாளிகள் இயற்கை பேரிடர்களிலிருந்து எளிதாக தப்பித்துக்கொள்கிறார்கள், அந்த இயற்கை அழிவிலே சிக்கி சின்னப்பின்னமாவது நம்மை போன்றவர்கள் தான். ஏன் ஒசோனை ஒட்டையாக்கிதில் பெரும் பங்கு இந்த முதலாளிக்குத்தானே உண்டு என்பதை நாம் மறந்து விட கூடாது.

நம்முடைய சமகாலத்திலே உலகிலே பல முனைகளில் முதலாளித்துவத்திற்கு எதிராக நடைப்பெற்றுக்கொண்டிருக்கிற போராட்டங்களை நாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். கடன் அட்டை, தனிநபர்கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன் மற்றும் “பியூட்டி சலூன்” என்ற பெயரிலே நம்முடைய மக்களின் வருமானத்தையும், சுயமரியாதையும், சமூக அக்கறையும் சிதைத்துக் கொண்டிருக்கும் இந்த ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக நாம் அனைவரும் எப்போது ஒன்றிணைந்து போராடப்போகிறோம்.

தேசியத்திற்கு எதிராக பேசுபவர்களும், வர்க்கப்போராட்டத்தை மட்டும் ஆதரித்துப்பேசுபவர்களும் தங்களுடைய வறட்டு கொள்கையினை கைவிட்டு மக்கள் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும். முதலாளிகளின் நலனுக்காகத்தான் தேசியமும், அரசுகளும் கட்டியமைக்கப்பட்டது என்பதில் யாருக்கும் ஐயமில்லை. அதேப்போல தோழர் ஸ்டாலின் உயிருடன் இருந்தப்போது இருந்த வர்க்கங்களும், முதலாளிகளும் இன்று இல்லை. இன்று பல வர்க்கங்கள் முளைத்திருக்கின்றன, கண்ணுக்குப் புலப்படாத முதலாளிகள் இருக்கிறார்கள், அமைப்புச்சார வர்க்கங்கள் பல உள்ளன. ஏதோ தொழிற்ச்சாலையில் வேலைச்செய்யும் தொழிலாளர்களை மட்டுமே வர்க்கமாக கருதுவதும் மிகவும் பிற்போக்குதனமானதே.

மக்கள் ஆட்சி, சோசலிச ஆட்சி, கம்யூனிச ஆட்சி போன்ற சரியான எடுத்துக்காட்டுகள் இன்று நமக்கில்லைத்தான், அதற்காக சாமன்ய மக்கள் இன்றைய ஆட்சிமுறைகளை அலட்ச்சியபடுத்தும் நோக்கிலே முற்போக்காளர்களும் தனிநாடு அல்லது தனித்தேசம் போன்ற தேவைகளை அலட்ச்சியப் படுத்துவது பெரும் வரலாற்று பிழையாகும். சாத்தியமற்றவற்றை சாத்தியமாக்குவது தான் நம்முடைய பணி, ஆனால் இன்று முதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும், பன்னாட்டு நிறுவனங்களும் மற்றும் பிற்போக்காளர்களும் தான் மக்களின் மனதில் இடம் பிடித்து கொண்டு சாத்தியமாகக்கூடாததை எல்லாம் சாத்தியமாக்கி கொண்டிருக்கிறார்கள்.

ஏன் சிங்கப்பூரும், மலேசியாவும் எலியும் பூனையுமாகத்தான் இன்றும் இருந்து கொண்டிருக்கிறது. தினம் தினம் நில ஆக்கிரமிப்பு இப்படி பல பிரச்சனைகள் அங்கும் முளைத்துக்கொண்டுத்தான் இருக்கிறது. இந்த தற்கால மற்றும் பல நிரந்தரப்பிரச்சனைகளை அவர்கள் எளிதாக தீர்த்துக்கொள்கிறார்கள். இது அவர்கள் இருவரும் தனிநாடாக இருப்பாதால் தான் சாத்தியமாகிறது. அதைப்போல தமிழ்நாடு மக்கள் நல கொள்கை கொண்ட தனி நாடக உருவெடுத்தால் நிச்சயம் முல்லைப்பெரியாறு, காவிரி, பாலாறு, ஒகனேகல், கட்சத்தீவு, தமிழக மீனவர் பிரச்சனை, மின்சாரப் பிரச்சனை, விலைவாசி உயர்வு, நிதிப்பிரச்சனை, மதப்பிரச்சனை, சிறுபான்மையினர் பிரச்சனை, ஊழல் மற்றும் சாதிப்பிரச்சனை உட்பட அனைத்துக்கும் நாம் எளிதில் தீர்வுகான முடியும். 

ஆனால் இன்றோ சமுக இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள், சுற்றுச்சுழல் பாதுகாப்பு இயக்கங்களின் பார்வையும், தமிழ் இயக்கங்களின் அணுகுமுறையும் ஒன்றுப்போல பயனிப்பது நிச்சயம் நம் மக்களுக்கு என்றுமே விடுதலையை பெற்றுத்தராது. அதிலும் குறிப்பாக ஜெயலலிதாவுக்கு வால் பிடிப்பது என்பது மிக கேவலத்திலும் கேவலம். மூன்று தமிழர் விடுதலை, பரமக்குடி படுகொலை, ஈழத்தமிழர் பிரச்சனை, தமிழ மீனவர் பிரச்சனை, அணு உலை எதிர்ப்பு, முல்லைப்பெரியாறு, காவிரி, பாலாறு, ஒகனேகல், விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அளிப்பது, குடிசைவாழ் மக்கள் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, இடஒதுக்கீடுப் பிரச்சனை, தாய்மொழிக்கல்வி, மக்கள் நலப்பணியாளர்கள் வேலைப்பறிப்பு, சமச்சீர்கல்வி, அண்ணா நூலக இடமாற்றம், சட்டமன்ற இடமாற்றம், அரசு ஒய்வுதிய குளறுபடி, எழும்பூர் இரயில் நிலையம் மாற்று, நெய்வெலி பிரச்சனை மற்றும் நரிமண எண்ணெய்வளப்பிரச்சனை போன்றவைகள் எல்லாம் நமக்கு சாதகமாகத்தான் இருக்கிறது. முன்னனியாக நின்று போராட்டத்தான் யாரும் முன் வருவதில்லை. யாரும் செய்ய முன்வராததை பெரியார் அன்று செய்தார், இன்று பெரியாரியம் பேசுபவர்கள் கூட வெங்காயம் போல நடந்து கொள்வதுதான் வாடிக்கையாக இருக்கிறது.  
   
பசுமைப்புரட்சி என்ற பெயரிலே நம் மண்ணையும், நம் பாராம்பரிய விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், நம் உடல் நலத்தையும் கெடுத்தது மட்டுமல்லாமல், பல்லாயிறக்கணக்கான நுண்ணுயிர்களையும் மற்றும் பறவை இனங்களையும் அழித்துக் கொண்டுவரும் இந்த பசுமைப்புரட்சியை எதிர்த்து ஏன் இந்த அப்துல் கலாம் குரல் எழுப்பவில்லை. அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் சிறு பிணக்கம் ஏற்பட்டால்கூட அமெரிக்கா உடனே இந்தியா மீது பொருளாதார தடை விதித்துவிடும். உடனே விவசாயத்திற்காக வழங்கும் விதை ஏற்றுமதியை உடனே நிறுத்திவிடும். இந்த விதைக்கான அல்லது பயிருக்கான உரத்தையும் நிறுத்திவிடும். இந்த உணவுகளை உட்கொள்வதால் வரும் நோய்களுக்கான மருந்துப்பொருட்களையும் நிறுத்திவிடும். இந்த அமெரிக்காதான் விதையும், அதற்க்கான உரத்தையும், இந்த விதையினால் வளரும் பயிர்பொருட்களை உட்கொள்வதால் வரும் நோய்க்கான மருந்து பொருட்களை தயாரித்து அனுப்புகிறது என்ற உண்மை எத்தனை கோடி மக்களுக்குத்தெரியும். இது போன்ற உண்மைகள் மக்களிடம் கொண்டுசெல்வது முதலாளித்துவத்தின் கடமை அல்ல, நம்முடைய கடமையாகும்.

இந்தக்கொடிய அமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடை விதித்தால் நிச்சயம் நம் விவசாயிகள் தற்கொலைச்செய்து கொள்வார்கள். இன்றும் அதுதான் தான் நடந்துக்கொண்டிருக்கிறது, மரணதண்டனை இல்லாமலே அரசால் நடைமுறையில் இருக்கும் சாவு தண்டனைகள் இவை. ஏனென்றால் நம்முடைய விவசாயிகள்தான் பராம்பரிய விவசாயத்தை மறந்துவிட்டார்களே.  

 

ஆகையால் தமிழ்நாட்டு மக்களே போராடுங்கள்! போராடுங்கள்! பிரச்சனைகளை துண்டு துண்டாக பார்க்காதீர்கள். எல்லாப் பிரச்சனைகளும் நம் தேசிய இனத்தையும், நம்முடைய தேசிய வளங்களை கொள்ளை அடிக்கும் நோக்கம் கொண்டாவையாகும். எல்லா வேறுபாடுகளையும் கலைந்து பல புள்ளிகளாக உள்ள நாம் ஒரே நேர் கோட்டில் போராட்டத்தில் இணைவோம்.

“நம் நிலங்கள் கொள்ளையடிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன

நாம் ஒன்று போராட வேண்டும்
இல்லையேல் கொல்லப்படுவோம்
ஏனென்றாம் நாம் தப்பி ஓடுவதற்கு நிலம் இல்லை”

மக்கள் போராட்டத்தில் இணையுங்கள்,

மனிதகுலம் தழைக்க பாடுபடுங்கள்.

இந்த நாசகர, கொலைகார அணு உலைகளை காசியிலே கொண்டு வையுங்கள். காசி விஸ்வநாதர் எந்த விபத்தும், கசிவும் இல்லாமல் நிச்சயம் பத்திரமாக பார்த்துக்கொள்வார்.

இவண்

கு.கண்ணன்

அணு உலையை மூடுவோம்,அணைக்கட்டை நமதாக்குவோம்!

“இந்தி”ய அரசு தமிழர்களுக்கு எதிராக செயல்படுவது இது ஒன்றும் முதல் முறையல்ல .ஈழப்போராட்டத்தின் போதே நாம் அதனை கண்டோம்.ஆனால் இப்போது இன்னும் அதிகமாக வெளிப்படையாகவும் தமிழ்நாட்டு மக்களின் மீது நேரடியாகவும் நடத்தப்படும் தாக்குதலை  கண்டு வருகிறோம் .கூடங்குளத்தில் ,முல்லை பெரியாற்றில் தாங்கள் தமிழர் விரோதிகளென வெளிப்படையாகவே அறிவிக்கின்றனர் .ஆனால் நாமோ துடுப்பில்லாமல் பயணம் செய்யும் படகை போல இலக்கில்லாமல் வெற்றி பெறும் வழிகளை தெரியாதவர்கள் போல பயணிக்கிறோம். இவற்றுக்காக போராட வேண்டுமா?வேண்டியதில்லையா ? என்று கூட தெரியாமல் கருத்தொற்றுமைக்கு வர முடியாமல் தள்ளாடுகிறோம்.

இலக்கை நோக்கிய போரட்டங்களை தவிர்த்து அடையாள ஆர்பாட்டங்களையும் ,அடையாள பேரணிகளையும்,அடையாள மறியல்களையும்,உண்ணாவிரதங்களையும் ,எதற்கும் பயனில்லாத கூட்டங்கள் கூடுவதையும் மட்டுமே செய்கிறோம் . இன்றைய தமிழக அரசியல் ,தொலைநோக்கு பார்வை கொஞ்சமும் இல்லாது ,போராட்டங்களை வெறும் பதிவு என்ற நிலையில் மட்டுமே செய்யகூடிய நிலையில்தான் இருக்கிறது .இன்றைக்கு ,தமிழ்ச்சமுகம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்காக தீர்க்கமான நிலைப்பாடுகளில் இருந்து போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்காமல் மரத்திற்கு மரம் தாவும் போக்கினையே இங்கு பலரும் கொண்டிருக்கின்றனர் என்பது நமது அரசியலுக்கு பெரும் பின்னடைவாக உள்ளது .அதாவது ஆழமாக இருக்ககூடிய பிரச்சனைகளுக்கு எந்த முடிவும் கிடைக்காத போதும்,பிரச்சனைகள் இன்னும் கடுமையாக மாறிகொண்டிருக்கும் போதும் ஒரு புதிய பிரச்சனை வந்துவிட்டால் நடத்தி கொண்டிருக்கும் அத்தனை போராட்டங்களையும் ,செயல்பாடுகளையும் முற்றிலும் கைவிட்டு விட்டு புதிய பிரச்சனையின் பின்னே ஓடும் போக்கே அது. இத்தகைய சூழலில் கூடங்குளம் மற்றும் முல்லை பெரியாறு ஆகிய இரு போராட்டங்கள் குறித்து நமது நிலைப்பாடு என்னவாக இருக்க முடியும் அல்லது வேண்டும் என்பதற்கான சிறு விவாதமே இந்த கட்டுரை .

தமிழ்நாட்டில் மிக நீண்ட காலத்திற்கு பிறகு மக்கள் மிகப்பெரிய அளவிற்கு போராடும் களங்களாக கூடன்குளமும்,முல்லை பெரியாரும் இருக்கிறது .இந்த அளவிற்கு மக்கள் எழுச்சியுற்று போராடுவது அரசுக்கும்,அரசியல் கட்சிகளுக்கும் ,இயக்கங்களுக்கும் வியப்பினை தருவதாக உள்ளன .இந்த சூழலில் வரலாறு நமக்கு இந்த போராட்டங்களை காணும் வாய்ப்பினை வழங்குவதோடு மட்டும் நிற்காமல் பங்கெடுக்கும் வாய்ப்பினையும் வழங்குகிறது.இந்த வாய்ப்பினை இங்கே உள்ள ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டும் என்பதும் இந்த கட்டுரையின் நோக்கம் .

முன்னதாக ,இந்த கட்டுரையின் துவக்கத்தில் நான் வைத்த விமர்சனத்தின் மூலத்தை சற்றே பார்க்கலாம் .ஈழப்போராட்ட துரோகம் ,போர்குற்ற விசாரணை முடக்கம் ,மூவர் தூக்கு தண்டனை சதி ,பரமக்குடி படுகொலைகள் ,கூடங்குளம் அணுஉலை விவகாரம் என்று தமிழகம் தொடர்ந்து போராடி வந்தாலும் இன்று முல்லை பெரியாறு பிரச்சனையில் கவனம் குவித்து களமாடுகிறது.இந்த முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழ்நாடு மக்களின் வாழ்வாதாரத்தையும் ,உரிமையினையும் பறிப்பதற்க்காக மத்திய அரசும்,கேரளா மாநில அரசும் திட்டமிட்டு சதி செய்து வருகின்றன .ஆனால் இந்த சதிகாரர்களுக்கு எதிராக தமிழக மக்கள் புரிந்திருக்கும் எதிர்வினையானது மிகவும் எழுச்சிகரமாகவும்,பலமானதாகவும், இந்த நாச வேலைக்கு காரணமாக இருந்தவர்களுக்கு மிகச்சரியான பதிலடியாகவும் இருக்கிறது.முல்லைபெரியாருக்காக கம்பம்,போடி,தேனி போன்ற பகுதிகளின் மக்கள் தன்னெழுச்சியாக திரண்டு அணையை நோக்கி பேரணியாக திரள்கின்றனர் .தமிழ்நாட்டு பிரச்சனை என்றாலும் இந்த போராட்டம் தமிழ்நாடு காவல்துறையின் சகல ஒடுக்குமுறையையும் எதிர்கொண்டுதான் நடக்கிறது ஆனால் இந்த ஒடுக்குமுறை கண்டு அஞ்சாது மக்கள் கூடுகின்ற எண்ணிக்கைதான் கேரளா அரசுக்கும் ,மத்திய அரசுக்கும் பயத்தை கிளப்பி இருக்கிறது. .தமிழ்நாட்டின் உரிமைக்காக மக்கள் நடத்தும் இந்த போராட்டம் வெல்லவேண்டும் அல்லது வென்றாக வேண்டும் என்பதுதான் நம் ஒவ்வொருவரின் எண்ணமாக உள்ளது.

ஆனால் வரலாறு நெடுக எப்பொழுதும் நாம் புரிந்து வரும் தவறினை இப்பொழுதும் தொடர்ந்து செய்யப்போகிறோமா?என்பதில் நமது கவனத்தை செலுத்தினால் நல்லது என்று நினைக்கிறேன்.

நம்மால் ஒன்றுப்பட்டு போராட முடியாததாலும்,இலக்கில்லாமல் போராடியதாலும் ,பல துரோகங்களுக்கு ஆளானதாலும் ஈழப்போராட்டத்தில் கடும் பின்னடைவையும் ,பேரழிவையும் சந்தித்தோம். நமது தோல்விக்கு பகுதியாக காரணமானவர்களை பழிவாங்க சட்டமன்ற தேர்தலில் கவனத்தை குவித்து ,ஈழப்போராட்ட துரோகிகளுக்கு எதிராக களமாடி நினைத்ததை சாதித்தோம் .தமிழகத்தில் புதிய அரசு அமைந்த நேரத்தில் போர்குற்றம் தொடர்பான ஆவணப்படம் வெளியாகவே தமிழ்நாட்டில் அது தொடர்பான போராட்டங்கள் தொடர்ச்சியாக எழுந்தன .ஆனால் மூவருக்கு தூக்கு என்று அறிவித்ததுதான் தாமதம் ,நாம் போர்குற்றங்கள் தொடர்பான போராட்டங்களை அப்படியே போட்டுவிட்டு மூவர் தூக்கு எதிராக போராட வந்தோம்.போராட்ட வலுவினாலும்,செங்கொடி  போன்றவர்களின் ஈகத்தாலும் ஈழப்பிரச்சனைக்கு போன்றே மூவர் தூக்குக்கும் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரமுடிந்ததே அன்று அந்த பிரச்சனைகளை இன்றளவிற்கும் சாதகமான முடிவிற்கு நம்மால் கொண்டு வர முடியவில்லை.ஈழப்படுகொலையை நடத்திய போர்க்குற்றவாளிகள் இன்னமும் சுதந்திரமாக உலா வந்து கொண்டிருக்கின்றனர் .நாமோ சட்டப்பேரவை தீர்மானங்களோடு திருப்தி அடைந்து விட்டிருக்கிறோம்.மூவர் தூக்குக்கு எதிராக போராடி கொண்டிருக்கும் தருவாயில்தான் பரமக்குடி படுகொலைகள் நடந்தேறின .தமிழ்நாட்டின் உண்மையான பிரச்சனையை இங்கேதான் சந்தித்தோம்.ஒன்றாக போராடியவர்கள் இப்போது பிரிந்து நின்று போராடியதை பார்த்தோம்.நாம் எப்பொழுதெல்லாம் இணைந்து போராடுகிறோமோ அப்பொழுதெல்லாம் மத்திய ,மாநில அரசுகள் அனைத்து சூழ்ச்சிகளையும் செய்து நம்மை பிளவுபடுத்துவதொடு அதற்க்கு ஆதிக்க சாதி வெறி பிரிவுகளை துணையாக வைத்துகொண்டு நம்மை துண்டாடுவதையும் வழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறது.இந்த வாய்ப்புகளை ஆதிக்க சாதிவெறியும் நன்கு பயன்படுத்திகொள்கிறது.இந்த மத்திய,மாநில அரசுகளையும்  ,ஆதிக்க சாதி வெறியினையும் எதிர்த்தோமில்லை,எதிர்த்து உறுதியுடன் ஒற்றுமையாக நின்றோமில்லை .

இந்த சூழலில்தான் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் வெடித்தது .இப்போதும் வழக்கம் போல இருக்கும் பிரச்சனைகளை கைவிட்டு விட்டு அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் கவனம் செலுத்தினோம்.50000 -இக்கும் மேற்ப்பட்ட மக்களின் பங்கேற்ப்பும்,சாகும் வரை உண்ணாவிரதம் போன்ற போராட்டங்கள் மத்திய ,மாநில அரசினை பாதித்தன .இன்றளவிற்கும் 130 நாட்களை கடந்து அணுஉலை வேண்டாம் என்று உறுதியுடன் போராடி கொண்டிருக்கும் போராட்டத்தை குலைக்கவே மத்தியை ஆளும் காங்கிரஸ் அரசும்,கேரளாவை ஆளும் காங்கிரஸ் அரசும் இணைந்து முல்லை பெரியாறு பிரச்சனையை தமிழக மக்கள் மீது திணித்தனர் இன்று முல்லை பெரியாறு பிரச்சனைக்காக அனைவரும் போராடிகொண்டிருக்கிறோம்.ஆனால் நாளையொரு புதிய பிரச்சனை கிளப்பப்பட்டால் அனைவரும் முல்லை பெரியாறு பிரச்சனையையும் அப்படியே போட்டுவிட்டு புதிதாக வரும் பிரச்சனையை கையில் எடுத்துக்கொண்டு திரிவோம் என்பதில் எந்த சந்தேகமும் தேவையில்லை.ஏனென்றால் நமது வரலாறு அப்படி இருக்கிறது .புதிய பிரச்சனைகள் கிளப்பப்படும்போது இருக்கும் பிரச்சனைகளை அப்படியே கிடப்பில் போட்டுவிடுகிறோம் . 

ஈழத்தில் மக்களின் துயரங்கள் துடைக்கப்பட்டு விட்டதா?அந்த மக்களை விடுவிப்பது குறித்த போராட்டங்களை இன்றைக்கு காணோம் !போர்க்குற்றவாளிகளை தண்டித்துவிட்டோமா?அந்த கொடியவர்களை தண்டிக்க வலியுறுத்தும் எந்த போராட்டத்தையும் இன்று நாம் காணவில்லை .மூவர் தூக்கு குறித்த கவனம் இல்லை ,சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல்கள் இல்லை .கூடங்குளம் போராட்டம் குறித்த ஆர்வம் மங்க துவங்கலாயிற்று ,எப்படியும் துவங்கிவிடுவான் என்று வேறு சிலர் !,இன்றைய பாடு பொருளாக முல்லை பெரியாறு இருக்கிறது .இதுவும் இன்னும் எத்தனை நாளுக்கோ ? ஆனால் ,உண்மையோ !ஈழ மக்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்த வண்ணம்தான் உள்ளன ,போர்க்குற்றவாளிகள் திமிராக  பேசிக்கொண்டு அலைகின்றனர்,மூவர் தூக்கு இன்னமும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது,பரமக்குடி படுகொலைகளுக்கு காரணமானவர்கள் இன்னமும் சுதந்திரமாக உலா வருகின்றனர் ,கூடங்குளம் அணு உலையை திறந்தே தீருவோம் என்று மத்திய அரசு பல வழிகளில் ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுவதொடு போராடும் மக்களை கடித்து குதற சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ஓநாயாக இன்று நின்று கொண்டிருக்கிறது.முல்லை பெரியாறு பிரச்சனையிலும் இரு மாநில மக்களின் உணர்ச்சிகளை தூண்டி விட்டு மோதல்களுக்கு வழி வகுத்து இருமாநில மக்களையும் துண்டாடி தனக்கு சாதகமான விடயங்களை சாதித்து கொள்ள நிற்கிறது மத்திய அரசு. இதன் மூலமாக அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் கேரளா மக்களும் இணைந்து நின்றதையும் இப்போது பிரித்துவிட்டிருக்கிறது மத்திய அரசு . .

முல்லை பெரியாருக்காக போராடும் பலர் கூடங்குளம் போராட்டத்தை பற்றிய தவறான புரிதலில் இருக்கின்றனர் ,அதே போல அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் எடுப்பதும் பலர் முல்லை பெரியாறு பிரச்சனையை கையில் எடுக்க தயங்குகின்றனர் 

இங்கேதான் இந்த இடத்திலேதான் கூடன்குள போராட்டத்தை சிதைக்கும் உள்நோக்கத்தோடு கருத்துக்களை உருவாக்கி வெளியிடுகிறது மத்திய அரசு,தமிழக மக்களை துண்டாடவும் இதே கருத்தினை பயன்படுத்துகிறது மத்திய அரசு .அதுதான் கூடங்குளத்தில் பூகம்பம் வரும் என்கிறீர்கள் ? முல்லை பெரியாற்றில் பூகம்பம் வராது என்கிறீர்கள் ?  நீங்கள் பேசுவது சரியில்லையே என்பதுதான் அது.இன்று வலுப்பெற்று வரும் முல்லை பெரியாறு பிரச்சனையில் கேரளத்தரப்பில் வைக்கப்படும் வாதங்களாவன அணை பலவீனமாக இருக்கிறது ,அதனால் அதை இடித்து விட்டு புதிய அணை கட்டவேண்டும் என்பது .நமது தரப்போ அணை பாதுகாப்பானது ,எந்த பூகம்பத்தையும் தாங்க வல்லது ,மிகவும் தேர்ச்சி பெற்ற வல்லுனர்களை வைத்து உறுதிபடுத்தி இருக்கிறோம் என்று கூறுகிறது .இந்த வாதங்களை நாம் முன் வைக்கும் போது தயாராக இருக்கிறது ஒரு கேள்வி கூடங்குளத்தில் மட்டும் பூகம்பம் ,சுனாமி வந்துவிடும் என்கிறீர்கள்!அணை இருக்கும் பகுதியில் மட்டும் பூகம்பம் வராதோ என்று ?இந்த கேள்வி கேட்கப்படும் தருணமும் ,சூழலும் மிகவும் பொருத்தப்பாடாகவும்,நியாயமானதாக இருக்கிறதே என்று எண்ணத்தோன்றும் அளவிற்கும் ,சாதாரண மக்களை குழப்பும் அளவிற்கும் இருப்பதில்தான் இவர்களது திறமையும் ,சூழ்ச்சியும் இருக்கிறது .கூடங்குளத்தில் பூகம்பம் வரும்,முல்லை பெரியாற்றில் வராதா ?வரும் நிச்சயமாக வரும் என்பதை ஒத்துக்கொள்கிறோம்.முல்லை பெரியாரில் மட்டுமல்ல கூடங்குளத்திலும் பூகம்பம் மட்டுமல்ல ,சுனாமி போன்றவைகளும் வரும் என்பதிலும் நாம் உறுதியாக இருக்கிறோம்.இரு இடங்களிலுமே பூகம்பம் வருவதாக வைத்து கொள்வோம் .என்ன நடக்கும்?முல்லை பெரியாறு அணை பூகம்பம் வந்து உடைந்தால் அந்த நீர் முழுவதும் அந்த ஆற்று ஒழுங்கிலே பயணித்து நேரடியாக இடுக்கி அணையினை வந்து சேரும் .முல்லை பெரியாற்று அணையின் மொத்த நீரும் இடுக்கி அணையின் கொள்ளளவில் 10 சதத்திற்கும் குறைவான அளவே..முல்லை பெரியாறு அணை 2600 அடி உயரத்தில் இருக்கிறது,மக்கள் வசிக்கும் பகுதிகளோ 3200 அடிக்கு மேல் இருக்கிறது.மக்கள் எந்த வகையிலும் பாதிப்படைய மாட்டார்கள் என்பது தெளிவிலும் தெளிவு .அதே சமயத்தில் கூடங்குளத்தில் பூகம்பம் வருவதாக வைத்து கொள்வோம்.அணு உலைகள் வெடித்து ஏற்ப்படும் அழிவானது 20 லட்சம் மக்களை நேரடியாகவும் ,2 கோடி மக்களை பகுதியாகவும் அழித்து நாசமாக்கும் .(புகுஷிமா அணு உலைகளை மூட 78400 கோடி ரூபாயும் 40 ஆண்டுகளும் தேவை என்று அறிவித்திருக்கின்றனர்).அணு சக்தியினால் ஏற்ப்படும் நாசம் இந்த தலைமுறைக்கு மட்டுமல்ல,பின் வரும் 40000 ஆண்டுகளுக்கு அதன் பாதிப்புகள் நீடித்திருக்கும்.மக்களையும்,அவர்களது வாழ்வாதாரங்களையும் அழித்து,வரும் தலைமுறைகளுக்கு நஞ்சூட்டபட்ட நிலத்தையும்,தண்ணீரையும் ,சுற்றுசூழலையும் தர எந்த அறிவியலுக்கும் உரிமையில்லை .

அதே போல அணுஉலை விபத்து இயற்கை அழிவுகளால் மட்டும் வருவதில்லை,மனித தவறுகளாலும் ஏற்படும்.புகுஷிமா அணுஉலை விபத்து இயற்கை அழிவினால் நடந்தது,செர்நோபில் விபத்து மனித தவறினால் நடந்தது .இன்றும் உலகின் பல பகுதிகளில் அணு உலை விபத்துகள் நடந்த வண்ணம்தான் உள்ளன .இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் உலகம் முழுவதிலும் அணைகளில் ஏற்பட்டுள்ள விபத்து மிகச்சிலவே ,அணு உலைகளில்தான் அதிகமான விபத்துகள் நடந்துள்ளன .

மொத்தத்தில் பூகம்பம் ,சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் வருவதற்கு இரு இடங்களிலும் சாத்தியக்கூறுகள் உள்ளன.ஆனால் விளைவுகளை ஆய்வுக்கு உட்படுத்தி பார்க்கும் போது நாம் ஒரு தெளிவான முடிவுக்கு வந்து சேர முடியும் அதுதான் அணு உலையை மூடுவதும் ,அணையை காப்பதும் என்பதே.

ஒரே சமயத்தில் நாம் இந்த இரு போராட்டங்களையும் நடத்தி கொண்டிருப்பதால் இந்த இரு போராட்டங்களின் எதிர்காலம் குறித்து நாம் சற்றே தெரிந்து கொள்வதும் நமது செயல்திட்டத்திற்கு பெருமுதவியாக இருக்கும்.அதற்கான கண்ணோட்டத்தில் பார்த்தோமானால் இடிந்தகரை,கூடங்குளத்திலும் தொடரும் அணுஉலைக்கு எதிரான போராட்டம் இன்றைய நிலையில் மத்திய அரசிடம் இருந்து கடும் ஒடுக்குமுறைகளை சந்தித்து கொண்டிருக்கிறது மாநில அரசினையும் முழுவதுமாக நம்ப இயலாது அது எந்த நேரத்திலும் மத்திய அரசின் ஊதுகுழலாக மாறிவிடும் சந்தர்ப்பம் இருந்துக்கொண்டே இருக்கிறது .ஒரு வேளை மக்களின் பலம் உயர்ந்தால் மத்திய அரசின் நடவடிக்கைகள் சற்றே தள்ளி போகுமே தவிர ,முடிந்து விடாது .மக்கள் போராட்டத்தை களைப்படைய வைத்து,தொய்வடைய வைத்து ,கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கும் திட்டத்தையும்,வாய்ப்பு கிடைத்தால் ஒரேஅடியாக ஒழித்துவிடும் திட்டத்தையும் தன்னகத்தே வைத்து கொண்டிருக்கும் இவ்வெதிரிக்கு எதிராக நாம் வழக்கம் போல தோற்க்கக்கூடாது.இன்னொரு புறம் முல்லை பெரியாறு அணை போராட்டத்தில் மக்கள் போராட்டம் வலுவடைந்து கொண்டிருக்குமதே வேளையில் இன்னும் அமைப்பு வடிவம் பெறாமலும் ,தன்னெழுச்சி வகையில் நடந்து கொண்டிருக்கும் இந்த போராட்டம் நீண்ட நாட்கள் தொடர்ச்சியாக நடந்தேறுவதர்க்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது .மேலும் அரசு களைப்படைய வைக்கும் ,தொய்வடைய வைக்கும் போக்கினை கடைபிடிக்க துவங்கினால் இந்த போராட்டம் விரைவில் குறுகிவிடும் .

ஆனால் முல்லை பெரியாறு பிரச்சனையை பொறுத்தவரை ,நாம் ஒற்றுமையாக நின்று கேரளா மாநிலத்தின் மீதான பிடியை இறுக்கினாலே முல்லை பெரியாறு போராட்டத்தை எளிதாக வெல்லலாம் .மாறாக கூடங்குளம் அணு உலை பிரச்சனையில் உலக ஏகாதிப்பத்தியங்களின்,இந்திய அரசின்,பெரு முதலாளிகளின் நலன்கள் பெருமளவில் இருப்பதால் அவ்வளவு எளிதில் அவர்கள் விட்டு கொடுத்து விட மாட்டார்கள் என்பதோடு எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் இந்த போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கிவிட தயாராகவே இருக்கிறார்கள் .இந்த புரிதலின் மீது நின்று ,இந்த இரு போராட்டங்களின் தகைமையையும் ,முக்கியத்துவத்தையும் உணர்ந்தோமானால் எந்த போராட்டதிற்கு எவ்வளவு கவனம் தரவேண்டும் என்ற தெளிவே நமக்கு கிடைக்கும் .நெடியதும்,கடியதும் ,போராட்டம் மிகுதியாக தேவைப்படும் கூடன்குள போராட்டத்தையும் ,வெல்லக்கூடிய முல்லை பெரியாறு பிரச்சனையையும் நாம் ஒரே கால கட்டத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறோம் .இந்த போராட்டங்கள் இயல்பாகவே தமிழகத்தின் இரு வேறு பகுதிகளில் மையம் கொண்டிருக்கின்றன .தொடர்பற்றும்,நீண்ட தொலைவிலும் இந்த இரு போராட்டங்களும் ,அதன் ஆதரவாளர்களும் தங்களது எதிர் திசையில் நடக்கும் போராட்டங்கள்  பற்றி மாறுபட்ட கருத்துக்கள் கொண்டிருக்கின்றனர் .இவை இந்த இரு போராட்டங்களும் இணைவதற்கான சாத்தியக்கூறுகளை குறைக்கின்றன .மாறாக நாம் தொலைநோக்கு பார்வையோடு இந்த இரு போராட்டங்களும் தமிழ்நாட்டின் ,தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டமே என்று உணர வேண்டும் .தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தில் உள்ளடங்கிய அங்கங்களாக இந்த இரு நிகழ்ச்சிகளும் விளங்கும் இந்நேரத்தில் இந்த போராட்டங்களை கவனிப்பதும் காப்பதும் நமது கடமையாகும் 

இந்த தெளிவிலிருந்து நமது போராட்டங்களை தொடர முற்படும்போது நமக்கு முன்னே தடையாக இருப்பது வெற்றிக்கான செயல்திட்டமும் அதனை சாத்தியப்படுத்தும் வழிமுறைகளுமே ஆகும் .

நமது இறுதி இலக்கை மனதில் இருத்தும் அதே நேரத்தில் பல்வேறு போராட்டங்களும் நம்மை படி படியாகவும் அதற்குரிய தனித்தன்மையிலும்,மாறுபட்ட வழிமுறைகளிலும் நமது இலக்குகளை நோக்கியதான உந்துவிசையாக இருக்கிறது என்பதையும் நாம் மனதில் இருத்த வேண்டும். பல்வேறு பிரச்சனைகளையும் அதற்க்கான போராட்டங்களையும் சரியான அளவிற்கு இணைத்து போராடுவதிலேதான் நமது வெற்றிக்கான கூறுகளும் பொதிந்து கிடக்கின்றன. இப்போது தனித்தனியாக நடக்கும் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தையும் ,அணைக்கான போராட்டத்தையும் இணைப்பதோடு இந்த போராட்டங்கள் வழியாக அனைத்து போராட்டங்களின் கோரிக்கைகளையுமே எடுத்து செல்லும் விவேகம் நமக்கு வேண்டும்.

அதற்க்கு ,சாதாரண காலத்தில் மக்களுக்கு இருக்கும் அரசியல் விழிப்புணர்வை காட்டிலும் போராட்டக்காலத்தில் மக்களிடையே ஏற்படும் விழிப்புணர்வு அசாத்தியமானது .போராட்டம் மக்களுடைய கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும் ,போராடும் குணத்தையும் வளர்த்தெடுப்பதொடு போராட்டத்தின் நியாயப்பாட்டை பற்றிய உணர்வையும் வளர்த்தெடுக்கிறது .போராடும் மக்களுக்கு தங்களது போராட்டத்தின் நியாயம் மட்டுமல்ல.நியாயமாக போராடும் மற்றவர்களின் போராட்டங்களில் உள்ள நியாயப்பாட்டையும் புரிந்து கொள்கின்றனர் .

இந்த சாதகத்தைதான் நாம் பயன்படுத்தவேண்டும் .முல்லை பெரியாறு பிரச்சனைக்காக போராடி உணர்வு பெற்று நியாயங்களை தேடிகொண்டிருக்கும் மக்களிடையே கூடங்குளம் போராட்டம் பற்றிய உண்மைகளை கொண்டு சேர்த்து அவர்களின் ஆதரவை பெற வேண்டும் .அதே போல நீண்ட நாட்களாக போராடி அனுபவமும் உறுதியும் பெற்றிருக்கும் இடிந்தகரை,கூடன்குள மக்களிடையே முல்லை பெரியாறு பிரச்சனையை விளக்கி அவர்கள் ஆதரவு பெறவேண்டும் .

இந்த போராட்ட சூழல் இடிந்தகரை ,கூடன்குள மக்களையும்,கம்பம்,போடி,தேனி பகுதி மக்களையும் அரசியல் ரீதியாக பெருமளவு முன்னேற்றியிருக்கிறது இந்த போராட்டங்கள் வலுப்பெற அவை விரிவுப்படுத்தபடவேண்டும்.பரவலான மக்களின் ஆதரவை பெற வேண்டும்.அரசியல் ரீதியாக ,போராட்ட ரீதியாக,உணர்வு ரீதியாக வளர்ச்சி பெற்று போராடி கொண்டிருக்கும் அணு எதிர்ப்பு போராட்டம் முல்லை பெரியாறு பிரச்சனைக்காக போராட வேண்டும் .அதே போல வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் முல்லை பெரியாறு போராட்டம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக போராட வேண்டும்.இது தமிழ்நாட்டிற்கு எதிரான அனைத்து பிரச்சனைகளையும் ஒரு சேர முடிவு கட்டிவிட வேண்டும் என்பதற்கான போராட்டம் .பல்வேறு போராட்டங்களை நாம் நீண்ட நாட்களாக முன்னெடுத்துகொண்டிருக்கிறோம் .இம்முறையும் முடிவுகளை எட்டாது நமது போராட்டங்கள் பின்னடைவுக்கு உள்ளாகுமானால் நாம் எப்போது வழக்கமாக செய்யும் தவறினையே மீண்டும் செய்தவர்களாவோம் .இம்முறை கவனமாக வழக்கமாக தவறுகள் செய்யும் தவறினை செய்யாமல் இருப்போம் .இம்முறை உறுதியுடன் ,தெளிந்த பார்வையுடன் ,வழிமுறையுடன் போராடுவோம் .நமது போராட்டங்களை தனித்தனியாக அல்ல,ஒன்றாக சேர்த்து போராடுவோம்.

அணு உலைகளை மூடுவோம்,அணைக்கட்டை நமதாக்குவோம் .

தமிழ்நாடு மக்கள் பேராயம்

ஜப்பானில் அணு உலை விபத்தும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களும்

ஜப்பானில் அணு உலை விபத்தும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களும்

உலகத்திலேயே நிலநடுக்கம், சுனாமி (ஆழிப்பேரலை)களை எதிர்கொள்ளும் தொழில்நுட்பம், சக்திகளை அதிகம் பெற்றிருக்கும் ஜப்பானில்தான் மார்ச் 11, 2011 அன்று பயங்கர நிலநடுக்கம், அதன் தொடர் விளைவாக ஏற்பட்ட சுனாமி தாக்குதலுக்கு ஜப்பானில் பூக்குஷிமா (Fukushima), ஒனஹாவா (Onagawa) அணுஉலைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு அதன் காரணமாகக் கதிர்வீச்சு அணு உலைகளிலிருந்து வெடித்துக் கிளம்பி, நீர் நிலம், காற்று, பால், கீரை மற்றும் தாவரங்கள், மாமிசம் ஆகியவற்றை பாதித்ததன் விளைவாக அணு உலையைச் சுற்றியுள்ள 20 கி.மீக்கு உட்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இப்படியாக அந்த இடமே வாழத் தகுதியற்ற இடமாக மாற்றப்பட்டுள்ளது. சுனாமியால் பாதித்த இடங்களில் கூட மக்கள் திரும்பப் போக முடியும், வீடுகட்ட முடியும், தொழில் நடத்த முடியும், பயிர் செய்ய முடியும், பயிர் செய்த உணவு பொருட்களை உண்ண முடியும். ஆனால் அணு உலைகளுக்கு அருகிலுள்ள பாதிக்கப்பட்ட இடங்களில் மேற்கூறியவை எதையுமே செய்ய முடியாது. அவ்வளவு கொடூரமானவை அணு உலையிலிருந்து வெளியாகும் அணுக்கதிர்களின் விளைவுகள். மேலும் அணு உலையிலிருந்து வெளியான கதிர்வீச்சால் 240 கி.மீ. தொலைவிலுள்ள ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் கூட குடிநீரில் அயோடின் 131 அதிகம் இருப்பதன் காரணமாக குழாய்களில் இருந்து வரும் குடிநீரைக் குடிக்க வேண்டாம் என்று மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் அணு உலைகளிலிருந்து வெடித்துக் கிளம்பிய கதிர்வீச்சு கண்டம் தாண்டி 8600 கி.மீ. தொலைவிலுள்ள அமெரிக்கா வரை சென்று பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க சுற்றுச் சூழல் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில்கூட பாலில் சிறு அளவு கதிரியக்கம் உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. அமெரிக்க அரசு மட்டும்தான் அணு உலைகளால் பாதிக்கப்பட்ட ஐந்து பெரு நகரங்களில் இருந்து வரும் உணவுப் பொருட்களுக்குத் தடை விதித்துள்ளது.

ஜப்பானில் நடந்த விபத்து இயற்கைப் பேரழிவு மட்டும்தானா? அல்லது மக்கள் நலன் பாதுகாப்பு அம்சங்கள் முறையாக கடைபிடிக்கப்படவில்லையா?

விபத்துக்குள்ளான ஜப்பானிய அணுஉலைகள் General Electricals வடிவமைத்து உருவாக்கப்பட்ட அமெரிக்க அணு உலைகள் ஆகும் (இந்தியாவில் முதன்முதலில் நிறுவப்பட்ட தாராபூர் அணுமின் நிலையங்களும், அதே குழுமத்தால்தான் வழங்கப்பட்டது மனதில் கொள்ள வேண்டிய விஷயம்). அமெரிக்க அரசின் அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியம் 1992ம் ஆண்டு ஜப்பானிய அணு உலைகளிலுள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியும், அக்குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படவில்லை. சுனாமி தாக்கம் ஏற்பட்ட 10 நாட்களுக்கு முன்னர் கூட பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கண்டறியப்படவில்லை. ஆக அரசு, அணுசக்தி பாதுகாப்பு வாரியம், மக்கள் நலனைப் பொறுத்தமட்டில் ஒரு மெத்தனப் போக்கையே கடைபிடித்துள்ளது என கூறலாம். மேலும் 2007ஆம் ஆண்டு ஜப்பானில் கசவசாஹி கரீவா என்னுமிடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள அணு உலையில் தீ விபத்து ஏற்பட்டு அதன் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் அரசே செய்த ஆய்வில் அந்த அணுஉலை நிலநடுக்கம் ஏற்பட்ட வாய்ப்புள்ள பகுதியின் மேலேயே கட்டப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட அணு உலைகளை இயக்கும் நிறுவனமாக Tepco (Tokyo Electrical Power Compant) அதன் கடந்த கால வரலாற்றில் அணு உலை பாதுகாப்பு குறித்தான விஷயங்களை மக்களுக்குத் தெரியப்படுத்தாமல் மறைத்ததும் தெரியவந்துள்ளது. ஆக தெரிந்தே பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. அரசு, அணுசக்தி நிறுவனங்கள் இலாப நோக்கில் செயல்படும் வியாபார நிறுவனங்கள், அரசியல் சக்திகள்… இவைகளுக்குள் நிலவும் கூட்டணி சக்தியே அணுஉலை பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதற்கான காரணமாக பரவலாகப் பேசப்படுகிறது. ஆக இலாப நோக்கில் செயல்படும் அணுசக்தி பெருங்குழுமங்கள் மட்டுமே அணு உலைகள் தொடர்பான பாதுகாப்பு அம்சங்களைத் தீர்மானிக்கும் போது இத்தகைய சம்பவங்கள் தொடரத்தான் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்

தொலைதூர நாட்டில் ஓர் அணு விபத்து நடந்தால் அதனால் வெளியாகும் கதிர்வீச்சு நமது நாட்டை குறிப்பாகத் தமிழகத்தை வந்தடையுமா? அதன் காரணமாக சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா? என்பதே முக்கியமான கேள்வி! மேலும் நமது நாட்டில் / தமிழகத்தில் முன் உதாரணங்கள் ஏதேனும் இருக்கிறதா? 1986ல் ரஷ்யாவில் செர்னோபில் விபத்து நடந்து பல கொடிய விளைவுகளை அந்நாட்டில் மட்டுமல்லாது, தொலைதூர நாடுகளிலும் கூட பாதிப்பை ஏற்படுத்தியது, மனதில் கொள்வது நல்லது. செர்னோபில் விபத்து நடந்து இரு வாரங்களுக்குப் பின் கல்பாக்க அணு விஞ்ஞானிகள் காற்றிலும், ஆட்டு தைராய்டிலும் அயோடின் 131 எனும் வாயுக்கழிவினை அளந்து பார்க்கையில் அது முந்தைய அளவைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அணுக்கதிர் வீச்சின் தாக்கம் 3 6 மாதம் வரை நீடித்தது என அரசு தரப்புச் செய்திகளே தெளிவாக உள்ளன. மேலும் மும்பையில் செர்னோபில் விபத்திற்குப் பின் மே மாதம் காற்றில், மணலில் சீசியம் 137 எனும் கதிர்வீச்சுத் தன்மையுள்ள வேதிப்பொருளை அளந்து பார்க்கையில் காற்றில் அது அதிகபட்சமாக 4 மி.லி பெக்கரேல் / மீ எனும் அளவிலும் மணலில் விபத்திற்கு முன் 37 பெக்கரேல் / மீ2 என்ற அளவிலும் விபத்திற்குப் பின் அது 72 பெக்கரேல் / மீ2 (இரு மடங்காக) இருந்தது அணுசக்தி விஞ்ஞானிகளின் ஆய்வின் முடிவில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது. கல்பாக்கத்திலும், மும்பையிலும் அப்போதே இந்தக் கதிர்வீச்சின் காரணமாக சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டிருக்கின்றதா? என அறிய எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை என்பது வேதனையான விசயம். சென்னைக்கும், செர்னோபில்லுக்கும் இடையே உளள தூரம் ஏறக்குறைய 6200 கி.மீ. ஆகும்.

இப்போதும் ஜப்பான் அணு உலை விபத்திற்குப் பின் 8600/ கி.மீ. தொலைவிலுள்ள அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தின் தலைநகரமான சேக்ரோமெண்டோ எனுமிடத்தில் கதிர்வீச்சு பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது. உதாரணமாக அயோடின் 131ஐ எடுத்துக் கொண்டால் காற்றில் அதன் அளவு 165 மிலி பெக்கரேல் / மீ3 என இருந்தது. அதேபோன்று அமெரிக்கத் தலைநகரமான வாஷிங்டனில் கூட கதிர் வீச்சின் பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் கனடாவிலும், ஸ்காட்லாந்திலும், சைனாவிலும், தென்கொரியாவிலும் கதிர்வீச்சு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டோக்கியோவிலும் குடிநீரில் அயோடின் 131 அளவு பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட இருமடங்கு ஆக இருந்ததால் குழாய் மூலமாக பெறும் குடிநீரை யாரும் குடிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜப்பானுக்கும் தமிழ்நாட்டில் உள்ள சென்னைக்கும் இடையே உள்ள தூரம் வெறும் 6600 கி.மீ. மட்டுமே! 8600 கி.மீ. தொலைவில் பாதிப்பு இருக்கும் போது 6600 கி.மீ. தொலைவிலுள்ள சென்னையில் அதன் பாதிப்பு தெரிய வாய்ப்பு இருக்கும்போது அறிவியல் ரீதியாக கதிர்வீச்சை அளந்து பார்த்து பாதிப்பில்லை எனக் கூறுவதற்குப் பதிலாக காற்றின் திசை, அமெரிக்க நாடுகளின் பக்கம் இருப்பதாக கூறி இங்கே முறையாக அளந்து பார்க்காமல் பாதிப்பு ஏதும் இந்திய மக்களுக்கு வராது எனக் கூறுவது அறிவியல்தானா?

ஜப்பானிய அரசு குடிநீரிலும் உணவுப் பொருட்களிலும் கதிர்வீச்சின் பாதிப்பு இருப்பதை ஒப்புக் கொண்டாலும் அதன் அளவு குறைவாக இருப்பதால் சுகாதார சீர்கேடுகள் வராது எனக்கூறுவது சரிதானா? உணவுப் பொருட்களால் கதிர்வீச்சு பாதிப்பு ஏதும் வராது என இருந்தால் பாதிக்கப்பட்ட ஜப்பான் நகரங்களிலிருந்து வரும் உணவுப் பொருட்களுக்கு அமெரிக்கா ஏன் தடை விதிக்க வேண்டும்?

இந்தியாவில் ஏன் ஜப்பானிலிருந்து வரும் உணவுப் பொருட்களுக்குத் தடை விதிக்கப்படவில்லை? டோக்கியோவிலுள்ள குடிநீர் அயோடின் 131ன் பாதிப்பு குறைவாகத்தான் உள்ளது எனக் கூறினாலும். பின்னர் ஏன் குழாய் வழியான குடிநீரை குடிக்க கூடாது என சொல்ல வேண்டும்? ஆக கதிர்வீச்சு பாதிப்பு என்பது கண்டம்தாண்டி, (இந்திய சுகாதாரத்துறை கதிர்வீச்சின் அச்சம் காரணமாக ஜப்பானிலிருந்து வரும் உணவுப் பொருட்களுக்கு 3 மாதம் தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது) நாடுதாண்டி, பாதிப்பை ஏற்படுத்த முடியும் என இருந்தும் இந்தியாவில் / தமிழ்நாட்டில் முறையான அறிவியல் ஆய்வுகள் நடத்தப்படாதது எதனால்?

ஜப்பான் அனுபவத்திலிருந்து நாம் என்ன பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் எனப் புரிந்து கொள்வதற்கு முன் கதிர்வீச்சு மனித உடம்பில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தான சில அடிப்படை கருத்துகளை தெரிந்து கொள்வது நல்லது! அவை

1. கதிர்வீச்சைப் பொறுத்த வரை பாதுகாப்பான அளவு என ஒன்று இல்லவே இல்லை என்பதுதான் அணுசக்தி குறித்தான ஆய்வுகள் மேற்கொள்ளும் உலகளாவிய அறிஞர்களின் கருத்தாக உள்ளது.

2. 2005ஆம் ஆண்டு ஜனவரியில் X கதிர்கள், காமா கதிர்கள், நியூட்ரான்கள் புற்றுநோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என அதிகாரப்பூர்வமாக அறிவியல் நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

3. Xரே எடுப்பதால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு ஒரு அணுகுண்டு போட்டால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பை விட அதிகம் என்பதே வியக்கத்தகு அறிவியல் உண்மையாகும். இதற்கான காரணத்தை இப்போது சுருக்கமாகப் புரிந்து கொள்ளலாம். உடம்பில் செல் ஒன்றில் புற்றுநோய் ஏற்பட காரணமாக இருப்பது கண்ணுக்குப் புலப்படாத மிகச்சிறு அளவில் மூலக்கூற்றில் (DNA) இரு இடங்களில் ஏற்படும் மாற்றமே! அணுகுண்டினால் ஏற்படும் பெரும் கதிர்வீச்சு உடலில் (செல்களில்) பெரும்பாதிப்புகளை ஏற்படுத்துவதால் உடம்பால் அது உணரப்பட்டு அச்செல்லை உடம்பு அழித்து வருகிறது. இதை அபாப்டோசிஸ் (Apoptosis) என அழைப்பர். செல் அழிந்து விடுவதால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு தவிர்க்கப்படுகிறது.

4. அணுசக்தி துறையிலேயே மிகவும் முக்கியப் பிரச்சனை என்னவெனில் அதில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை எப்படி பாதுகாப்பது என்பதுதான். இதற்கான தொழில்நுட்பம் கூட இன்னமும் முழுமையாக கண்டறியப்படவில்லை. மேலும் கதிர்வீச்சின் பாதிப்பு எவ்வளவு காலம் நீடிக்கும்?

உதாரணமாக புளூட்டோனியம் 239ஐ எடுத்துக் கொள்வோம். இது தனது கதிர்வீச்சை பாதியாக குறைத்துக் கொள்ள எடுத்துக் கொள்ளும் நேரம் 24,000 வருடங்கள். அயோடின் 129ஐ எடுத்துக் கொள்வோம். 1990களிலேயே தாராபூர் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள கடல் தாவரங்களில் இதன் அளவு 740 மடங்கு அதிகம் இருந்தது அரசு விஞ்ஞானிகளாலேயே தெரியவந்தது. கல்பாக்கத்தில் என்னவெனில் கடல்வாழ் தாவரங்களில் இதை அளப்பதே இல்லை!

இந்த அயோடின் 129தனது கதிர்வீச்சைப் பாதியாக குறைக்க எடுத்துக் கொள்ளும் காலம் 17 மில்லியன் வருடங்கள் ஆகும். ஆக நாம் நமது சந்ததியினருக்கு இத்தகைய கொடூரமான அழிவுப் பொருட்களை விட்டுத்தான் செல்ல வேண்டுமா? நமது சந்ததியினர் வரும் காலத்தில் அக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டால் நமது மூதாதையர்கள் எத்தகைய பேரழிவை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றனர் என காறி உமிழமாட்டார்களா?

5. கதிர்வீச்சால் ஏற்படும் உடம்பு பாதிப்பு முற்றிலுமாகக் கண்டறியப்பட்டுள்ளதா? எனக் கேள்வி எழுப்பினால் அதற்குப் பதில் இல்லை என்றேதான் கூற முடியும். உதாரணமாக By Stander Effect. By Stander Effect என்றால் உடம்பில் கதிர்வீச்சுப் பாதையில் நேரடியாக படாத உறுப்புகளிலும் பாதிப்பு வருவதுதான். கதிர்வீச்சுப் பாதையிலுள்ள செல்களிலே ஏற்படும் வேதிமாற்றம் தூர உறுப்புகளின் செயல்பாட்டை பாதிப்பதால்தான் இது சாத்தியமாகிறது. இது சமீப காலத்தில்தான் கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற புதிய கதிர் வீச்சு பாதிப்புகள் பின்னர் கண்டறியப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஜப்பான் விபத்து நமக்கு உணர்த்துவது என்ன?

ஜப்பானில் ஏற்பட்ட விபத்திற்குக் காரணமாக இரண்டு கருத்துக்கள் நிலவுகின்றன.

வடிவமைக்கப்பட்ட, எதிர்பார்த்த அளவைவிட கூடுதலான அளவில் (ஜப்பானின் அணுஉலைகள் நிலநடுக்கத்தால் ஏற்படும் பாதிப்பை ரிக்டர் அளவுகளில் 8.5 வரை தாங்கும் சக்தி கொண்டவை ஆனால் இந்த முறை வந்த நிலநடுக்கமோ ரிக்டர் அளவுகோலில் 9க்கும் மேலாக) நிலநடுக்கம் பதிவானதால் அணு உலைகளால் அதன் தாக்கும் திறனை எதிர்கொள்ள முடியாமல் முடங்கிப் போய் செயல் இழந்தன.

அணுஉலையின் வடிவமைப்பிலேயே கோளாறுகள் / குறைபாடுகள் ஏதேனும் இருந்ததா? அப்படி இருந்தாலும் இந்த விபத்து நடந்திருக்க முடியும். இது குறித்தான முறையான புள்ளி விவரங்கள் இன்னமும் வெளிவராமல் தான் உள்ளன. ஆக அணுசக்தி துறை என்றாலே எவ்வளவு தூரம் செய்திகள் மறைக்கப்படுகின்றன. அதன் காரணமாக எத்தகையப் பேரழிவுகளை மனித குலம் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது. இதைப் போக்க என்ன செய்ய வேண்டுமென மக்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டிய தருணம் இது!

2004ஆம் ஆண்டு தமிழகத்து கல்பாக்கம் அணுஉலையில் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகள்

அரசு தரப்பில் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் கல்பாக்கம் அணு உலையின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் சில தினங்களுக்குப் பிறகு மீண்டும் பணி துவங்கப்பட்டது என்றும், கதிரியக்கப் பாதிப்புகள் ஏதும் நிகழவில்லை என்றும்தான் அரசு தரப்பின் வாதம் முன் வைக்கப்படுகிறது. இது உண்மையா? சுனாமிக்குப் பிறகு கல்பாக்க கடற்கரை மணலில் நான் செய்த ஆய்வில் கதிர்வீச்சு அதிகமிருப்பது தெரியவந்தது. அதற்கு காரணமாக புளூட்டோனியம் 239 இருக்கலாம் என சந்தேகிக்கும் வாய்ப்பும் உள்ளது. திரு.கண்ணன், கல்பாக்கம் சுற்றுச்சூழல் ஆய்வகத்தின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர். அவர் 31.12.2009 அன்று நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில் நிர்வாகம் தனக்கு பல வகையில் சுதந்திரம் கொடுத்திருந்தாலும் சுற்றுச்சூழலிலுள்ள ஆல்ஃபா மற்றும் புளூட்டோனியக் கதிர்வீச்சைப் பொறுத்த மட்டிலும் நிரந்தர, தற்காலிக பணியாளர்கள் உள்வாங்கிய ஆல்ஃபா, புளூட்டோனிய அளவைப் பொறுத்த மட்டிலும் சுதந்திரம் தராமலிருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது எனக் கூறியதாக தகவல் வெளியானதால், இச்செய்தியை மையப்படுத்தி துண்டறிக்கைகள் கல்பாக்க பகுதியில் ஒட்டப்பட்டாலும் அதற்கு நிர்வாகத்திடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.

மேலும் பத்திரிக்கை மூலமாக இதே கேள்வியை நிர்வாகத்திற்கு அனுப்பியிருந்தும் அதற்கும் பதிலேதுமில்லை. இதுதான் அறிவியலா? இங்கே ஒரு செய்தியை குறிப்பிட வேண்டும். பாண்டிச்சேரியைச் சேர்ந்த காரைக்கால் பகுதியிலுள்ள நான்கு மீனவக் குப்பங்களின் கடற்கரை மணலில் கதிர்வீச்சின் பாதிப்பு சுனாமிக்குப் பிறகு அதிகம் இருப்பதையும், அக்குப்பங்களில் சுனாமிக்குப் பிறகு புற்றுநோய், பிறவி ஊனம், குழந்தை இறந்தே பிறத்தல், கருக்கலைப்பு அதிகமிருப்பதையும் ஒப்புக் கொண்ட பாண்டிச்சேரி அரசு, கதிர்வீச்சால் தான் இப்பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா எனக் கண்டறியப்பட வேண்டும் எனக் கூறியது நினைவில் கொள்ள வேண்டும். மருத்துவ புத்தகங்கள் கதிர்வீச்சின் காரணமாக மேற்கூறியவை அனைத்தும் நிகழ வாய்ப்புள்ளது என்றுதான் சொல்கிறது என்பதையும் சேர்த்தே நினைவில் கொள்வது நல்லது.

மேலும் துண்டறிக்கை வாயிலாக, பத்திரிக்கை மூலமாக கல்பாக்க கடற்கரை மணலிலுள்ள ஆல்ஃபா, கதிர்வீச்சு, புளூட்டோனியத்தின் அளவு, கடல்வாழ் தாவரங்களிலுள்ள அயோடின் 129ன் அளவு, இவற்றை கலெக்டர், பத்திரிக்கையாளர்கள், பொதுமக்கள், துறை சாராத விஞ்ஞானிகள் முன்னிலையில் அளந்து காட்டத் தயாரா? என்ற கேள்விக்கு நிர்வாகம் பதிலேதும் கூறாமலிருப்பது எதனால்?

கல்பாக்க அறிவியலின் கதை

கல்பாக்க அணுமின் சக்தி, நிர்வாகம் அறிவியல் ரீதியாக நடந்து கொள்ளவில்லை என்பதற்கான உதாரணங்களைப் பார்ப்போம்.!

கல்பாக்கம் சுற்றுப்புற கிராமங்களில் பிறவி ஊனம், (கை, கால்களில் ஆறுவிரல் பிரச்சனை) அதிகமிருக்கலாம்; அதற்கு கதிர்வீச்சு காரணமாக இருக்கலாம் என நான் கூறியபோது நிர்வாகத்தினர் மறைமுகமான பேச்சுவார்த்தைக்கு என்னை அழைத்தனர். அச்சமயம் அறிவியல் ரீதியான கருத்துக்களை அவர்கள் ஏற்பதாகவும் அதற்கு தகுந்த விளக்கம் அளிப்பதாகவும் உறுதியளித்த அவர்கள் நான் அறிவியலற்ற கருத்துக்களை எனது விளம்பரத்திற்காகவும் தேவையற்ற அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த எத்தனித்தாலும் தகுந்த நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்பதையும் தெரிவித்தனர். அப்போது நான் அவர்களிடம் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டேன். நான் பாதிப்பு ஏதேனும் இருக்கலாம் எனக்கூறும்போது அது அறிவியல் ரீதியானதா, புள்ளி விவர அடிப்படையில் முக்கியம் வாய்ந்ததா? என்றெல்லாம் கேள்வி கேட்கும் நீங்கள் கல்பாக்க அணு உலை கதிர்வீச்சு காரணமாக பணியாளர்களுக்கும், சுற்றுப்புற மக்களுக்கும் பாதிப்பில்லை எனக்கூறுவதற்கு என்ன வகையான அறிவியல் ரீதியான ஆய்வுகளை மேற்கொண்டீர்கள்? அதன் புள்ளி விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு முன் வைத்தீர்களா? எனக் கேள்வி எழுப்பியபோது அதற்கு எந்தவொரு முறையான பதிலையும் நிர்வாகம் தரவில்லை என்பது வேதனையான விசயம்.

2003ல் வெளிவந்த என் முதல் ஆய்வில் பணியாளர்கள் + குடும்பத்தினர் மத்தியில் மல்டிபில் மயலோமா (Multiple Myeloma) எனும் எலும்பு மஜ்ஜை புற்றுநோய் இறப்பு விகிதம் அறிவியல் ரீதியாகவும், புள்ளி விவர அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததாலும் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி, பத்திரிக்கை செய்தியாகவும் அது வெளிவந்தது. அதில் மூன்று பேர் (இரண்டு ஆண்கள், ஒரு பெண்) ஒன்றரை வருட காலத்திற்குள் இறந்திருப்பது புள்ளி விவர அடிப்படையில் அதிகம் இருந்ததால் அதற்கு நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவர்களும் அதற்கு அதிகாரபூர்வமான பதிலை வெளியிட்டனர். பதிலில் அவர்கள் முன் வைத்த வாதம் தான் அறிவியல் ரீதியாக முழுமையாக அமையவில்லை என்பதுதான் வேடிக்கையான விஷயம். அவர்களின் பதில் பணியாளர்கள் உள்வாங்கிய கதிர்வீச்சின் அளவு அணுசக்தி ஒழுங்கு கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட குறைவாக இருந்தது என்பது மட்டுமே! அவர்களின் பதில் அறிவியல் ரீதியாக இருந்திருந்தால் அவர்கள் என்ன சொல்லியிருக்க வேண்டும்?

1. இறந்த மூவரும் மல்டிபில் மயலோமா வியாதியால் இறக்கவில்லை எனக் கூறாமல் விட்டதிலிருந்து புள்ளி விவரத்தை அவர்கள் மறுக்கவில்லை என்பது தெளிவாகிறது.

2. மருத்துவ ஏடுகள் அந்நோய்க்கும், அணுஉலை கதிர் வீச்சிற்கும் தொடர்பில்லை என்றுதான் கூறுகிறது என்றல்லவா பதிலளித்திருக்க வேண்டும் நான் மருத்துவ ஏடுகள் அந்நோய்க்கும் கதிர் வீச்சிற்கும் தொடர்பு உள்ளதை தெளிவாக குறிப்பிட்டதை அவர்களால் மறுக்க முடியவில்லையே!

3. புள்ளிவிவர அடிப்படையில் இது முக்கியம் வாய்ந்ததாக இல்லை என்பதையும் கூற முடியாமல் போனது எதனால்?

4. அமெரிக்கா, ஜப்பான் போன்ற மேலைநாடுகளில் அந்நோயால் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கும், மக்களுக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்க தனி சட்டமே இருக்கிறது. இதிலிருந்தே அந்நோய்க்கு கதிர்வீச்சு ஒரு முக்கிய காரணம் தான் என்பது தெளிவாகிறதல்லவா? அதைப்பற்றி ஏன் ஒரு வார்த்தைகூட கூறவில்லை!

5. பணியாளர்கள் உள்வாங்கிய உள் கதிர்வீச்சின் அளவை (Internal Contamination) ஏன் தெரியப்படுத்தவில்லை? என்பதற்கு பதிலேதும் இல்லையே!

6. மேலும் பணியாளர்கள் உள்வாங்கிய வெளிக்கதிர் வீச்சின் அளவை நான் அளந்து பார்க்க வாய்ப்பு அளிக்கப்படுமா? என்பதற்கும் பதில் ஏதும் இல்லை.

7. இறுதியாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊழியர்கள் எத்தனை நேர் மல்டிபில் மயலோமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் / இறந்துள்ளனர் என்ற கேள்விக்குப் பதில் கூறாமலிருந்தது எதனால்? இதுதான் அறிவியலா?

2008ல் என் ஆய்வில் சுற்றுப்புற மீனவப் பெண்கள் மத்தியில் ஆட்டோ இம்யூன் தைராய்டு வியாதி புள்ளி விவர அடிப்படையில் அதிகமிருப்பதற்கும், 2010ல் நான் செய்த ஆய்வில் தைராய்டு புற்றுநோய் இறப்பு விகிதம் அணு உலையின் 5 கி.மீ. சுற்றளவிலுள்ள சதுரங்கப்பட்டினம் கிராமத்தில் புள்ளி விவர அடிப்படையில் அதிகம் இருப்பதை பத்திரிக்கை வாயிலாகவும், துண்டறிக்கைகள் மூலமாகவும் தெரியப்படுத்தியதற்கும், தெளிவான முறையான, அறிவியல் ரீதியான விளக்கம் ஏதும் இல்லையே ஏன்? மாறாக 5 கி.மீ. சுற்றளவில் உள்ள கிராமங்களில் தைராய்டு புற்றுநோய் பாதிப்பு அதிகம் இல்லை என ஒரு தொண்டு நிறுவனம் ஆய்வுக்குப் பின் தெரிவித்ததாகப் பத்திரிக்கைகளுக்கு பதில் கொடுத்த அணுசக்தி நிர்வாகம், அவ்வாய்வறிக்கையைப் பொதுமக்கள் பார்வைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் கொடுக்க மறுப்பது எதனால்? இதுதான் அறிவியலா? நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அழைத்த அழைப்பின் காரணமாக நானும், பத்திரிக்கையாளர் ஒருவரும் உள்ளே சென்று அணுசக்தி விஞ்ஞானிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது உனக்கு அணு உலைகளைப் பற்றி என்ன தெரியும், நீ ஒரு வெளியாள் என்றும் அவர்களுக்குத்தான் அங்கு நடப்பது பற்றி முழுமையாக தெரியும் என்றும் வாயுக் கழிவான அயோடின் 131ன் அளவு ஏறக்குறைய முழுமையாக வடிகட்டி விடுவதாகவும் அதன் காரணமாகச் சுற்றுப்புற மக்களிடத்து தைராய்டு நோய் பாதிப்பு குறித்தான ஆய்வு செய்ய அவசியமில்லை எனக் கூறினர். அதை மறுத்து சில கேள்விகளை நான் கேட்டேன்

1. அணுசக்தி கதிர்வீச்சில் பாதுகாப்பான அளவு என்று ஒன்று இல்லையென ஒப்புக் கொள்வீர்களா? எனக்கேட்டதற்கு “ஆம்” என்றே கூறினர். அடுத்து கல்பாக்க அணு உலைகளின் காரணமாக சுற்றுப்புறக்காற்றில் அயோடின் 131 கொஞ்சம் கூட இல்லையா? எனக் கேட்டதற்கு கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது எனப் பதிலளித்தனர். அப்படியெனில் தைராய்டு பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கத்தானே செய்கின்றது என்பதுதானே உண்மை! ஆக பாதிப்பு உள்ளதா? இல்லையா? எனக் கண்டறிய ஒரு ஆய்வின் மூலம் மட்டுமே உறுதிப்படுத்த முடியும் என்பதுதானே அறிவியல் ரீதியான உண்மை! ஆய்வு செய்ய தேவையில்லை என்பது அறிவியலுக்கு முரணானதல்லவா! என்பதற்கு எந்த பதிலும் இல்லை. ஆட்டோ இம்யூன் தைராய்டு வியாதிக்கும், தைராய்டு புற்று நோய்க்கும் அயோடின் 131 (இது அணு உலையிலிருந்து வெளியாகும் வாயுக்கழிவு) காரணம் தான் என்பதை மருத்துவ ஏடுகள் தெளிவாக குறிப்பிடுகின்றன.

2002ல் செல்வக்குமார் எனும் ஒப்பந்த பணியாளர் சூலை மாதத்தில் சென்னை அணுமின் நிலையம் 2ல் வேலை பார்த்தபோது முறையான விளக்கங்கள் கொடுக்கப்படாததால் (Cotress Spring) எனும் கதிர்வீச்சுப் பொருளைக் கையில் எடுத்ததால் அவர் கை வெந்துபோனது. அவர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டதுடன் பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டார். அதன் முடிவுகளைக் கடிதம் மூலம் எழுதிக் கேட்டதற்கு எந்த ஒரு பதிலும் நிர்வாகம் தரவில்லை. நான் அவருக்கு செய்த ஆய்வில் அவருடைய ரத்த வெள்ளை அணுக்கள் குறைந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அணுசக்தி ஒழுங்கு கட்டுப் பாட்டு வாரியம் இந்நிகழ்வைச் சட்டப்படி பதிவு செய்திருக்க வேண்டுமென இருந்தும் அவர்கள் பதிவு செய்யாதது அதிர்ச்சியான விசயம்.

2003ல் கல்பாகக்ம் அணு மறு சுத்திகரிப்பு நிலையத்தில் (KARP) ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஆறு ஊழியர்கள் அதிகபட்ச கதிர்வீச்சுக்கு ஆளானார்கள் என நிர்வாகம் ஒத்துக் கொண்டாலும் அவர்களது இரத்தத்தை பரிசோதித்ததில் பாதிப்பு ஏதுமில்லை என நிர்வாகம் கூறியபோது எனக்கு அந்த முடிவில் சந்தேகம் இருக்கிறது. அதே ஆய்வினை அவர்களிடத்து செய்ய எனக்கு அனுமதியளிக்கப்படுமா? என்பதற்கு பதிலேதும் இல்லை. இதுதான் அறிவியலா?

சரி என்னை விட்டு விடுங்கள்! பொக்ரான்2, அணுசக்தி பரிசோதனையின் முடிவுகள் குறித்து அணுசக்தி விஞ்ஞானிகள் மத்தியிலேயே கருத்து வேறுபாடு எழுந்தபோது (திரு.சிதம்பரம், திரு. ககோட்கர், திரு. அப்துல்கலாம், அச்சோதனை வெற்றி எனவும், திரு. சந்தானம், திரு.கோமிசேத்னா (பொக்ரான் 1 வெடிப்பிற்கு பின்னணியிலிருந்த மிக முக்கியமான மனிதர்) அச்சோதனை வெற்றி பெறவில்லை எனக்கூறிய நிலையில், புள்ளி விவரங்களை திரு.சந்தானம் அவர்களுக்கு அளிக்காமல் விட்டதுதான் அறிவியலா? ஆக அறிவியல் என்பது அரசியல் சக்திகளுக்கும் பெரும் குழு வியாபார சக்திகளுக்கும், ஏகாதிபத்திய சக்திகளுக்கும் கட்டுப்பட்டுதான் இருக்கும் என்ற நிலை தொடரும் வரை அணு உலை பாதுகாப்பு என்பதும் மக்கள் நலன் என்பதும் வெறும் பேச்சளவில் மட்டுமே இருக்கும் என்பதுதானே உண்மை!

மீண்டும் கல்பாக்கம், அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து

ஜப்பானில் நடந்த விபத்து அணுஉலையின் மையப்பகுதிக்கு ஒரு வேளை உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும் அணுஉலை இயக்கத்தை கட்டுப்படுத்திய பின்னரும் வெளியாகும் சூட்டினை குறைக்க இருக்கும் குளிர்விப்பான் வழிமுறைகள் பயங்கர நிலநடுக்கத்தாலும், சுனாமியாலும் செயல் இழந்து போனதால் விபத்து ஏற்பட்டு சுற்றுப்புறத்தையும், மக்களையும் பாதித்துள்ளது. கல்பாக்கத்திலும் அத்தகையதொரு விபத்து நடக்க வாய்ப்பு உள்ளதா? எனில் உள்ளது என்றே கூற வேண்டும். வேறுவிதமாக சொன்னால் கல்பாக்கம் அணு உலைகளில் அத்தகையதொரு பாதிப்பு நடக்க வாய்ப்பில்லையென அறுதியிட்டுக் கூற முடியுமா? கூற முடியாது. சென்னை அணுமின் நிலையங் களிலும் அணு உலைகளின் செயல்பாட்டை நிறுத்திய பின்னரும் வெளியாகும் சூட்டைத் தணிக்க தயார் நிலையிலுள்ள டீசல் ஜெனரேட்டர், அவசர நிலை பேட்டரிகள், வெப்பத்தை தணிக்க உதவும் ஃபயர்வாட்டர் சிங்க் (Fire water sink) இவையனைத்தும் கடல் நீரின் மட்டத்திலிருந்து 500 மீட்டர் தொலைவிற்குள்தான் உள்ளது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். (ஜப்பானில் இதை விட அதிக தொலைவில்தான் அவை இருந்தன)

நிலநடுக்கமும் கல்பாக்கமும்

அடுத்தபடியாக கல்பாக்கம் அணுஉலைப் பகுதிக்கு அருகே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? அதன் காரணமாக பயங்கர சுனாமி தாக்குதலுக்கு அது ஆளாகாதா? அதன் காரணமாக குளிர்விக்கும் கருவிகளனைத்தும் பழுதடைய வாய்ப்பில்லையா? ஒன்றை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். 2001¢வரை கல்பாக்கம் நிலநடுக்க பதிவேடுகளில் 2 என்ற அளவிலேயிருந்தது. பின்னர் முந்தைய பாதிப்பை விட பின்னர் அது அதிக பாதிப்புள்ளாகும் எண் 3க்குத் தள்ளப்பட்டுள்ளது. (மகாராஷ்டிரா மாநிலத்தில் அமையவிருக்கும் ஜெய்தாபூர் அணு உலைகள் எண் 4ல் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெய்தாபூர் அணுஉலை வடிவமைப்புகள் தீவிர நிலநடுக்கம், சுனாமி, தாக்குதலை கணக்கில் கொண்டு வடிவமைக்கப்படவில்லை என்பதை அணுசக்தி நிர்வாகமே ஒத்துக் கொள்கிறது. இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் நியூசிலாந்த் நாட்டில் கிறிஸ்ட் சர்ச் என்னுமிடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 65 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்க பதிவேடுகளில் அந்த இடத்தில் நிலநடுக்கம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென பதிவு செய்யப்பட்டிருந்தும் அங்கே அது நிகழ்ந்துள்ளது. இதை Blind Fault என அழைப்பர். கல்பாக்கம் பகுதியிலும் Blind Fault வர வாய்ப்பில்லையா? ஒரு வேளை வந்து நில நடுக்கத்தின் மையம் கல்பாக்கம் அணு உலைகளுக்கு அருகில் இருந்தால் கல்பாக்க அணு உலைகளுக்கு பாதிப்பு வராது எனக் கூற முடியுமா?

இங்கே அணுசக்தி துறையில் உயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற திரு.கோபாலகிருஷ்ணன் (முன்னாள் தலைவர் அணுசக்தி ஒழுங்கு கட்டுப்பாட்டு வாரியம்) அவர்களின் கருத்துக்களை பதிவு செய்வது மிக அவசியமாகிறது. அணுசக்தி நிர்வாகம், நிலநடுக்க பதிவுகள் ஆய்வுகளை, கணக்கில் கொள்ளும்போது தனக்கு சாதகமான ஆய்வுகளை மட்டுமே எடுத்துக் கொள்வதாகவும், பாதகமான ஆய்வுகளை விட்டு விடுவதாகவும் குறை கூறியுள்ளார். இங்கு அணுசக்தி ஒழுங்கு கட்டுப்பாட்டு வாரியம் இந்திய அணுசக்திக் கழகத்தின் கீழ் செயல்பட வேண்டிய கட்டாயத்தால் அவர்கள் சொல்வதைத் தான் கேட்க வேண்டியுள்ளது. அமெரிக்காவில் உள்ளது போன்று அணுசக்தி ஒழுங்கு கட்டுப்பாட்டு வாரியம் தன்னிச்சையான, சுயேட்சையான சக்தியாக செயல்பட முடியாது போவதால் நிலநடுக்கப் புள்ளி விவரங்கள் குறித்தும் நிலநடுக்கத்தை தாங்கும் அணு உலையின் வடிவமைப்பைக் குறித்தும் சுயேட்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் இல்லாமலிருப்பதை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

மேலும் இந்திய அரசானது தான் வகுத்த அணுசக்தி கொள்கைகளுக்கு மாறாக செயல்படுவது முற்றிலும் சரியல்ல! எனவும் கூறியுள்ளார். அதாவது அணு உலைகளை ஏன் நாம் இறக்குமதி செய்ய வேண்டும்? அதுவும் பரிசோதனை செய்து பாதுகாப்பு, செயல்திறன் உறுதிப்படுத்தப்படாத அணு உலைகளை வாங்க நாம் ஏன் முற்பட வேண்டும், நமது நாட்டிலிருக்கும் அணு உலைகளின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு மெகாவாட் தயாரிக்க ரூ.8 கோடி தான் செலவாகும். ஆனால் வெளிநாட்டு அணு உலைகள் மூலம் ஒரு மெகாவாட் தயாரிக்க ஆகும் செலவோ ரூ.20 கோடி. மேலும் விபத்து என வரும்போது நமது அணு உலைகளை எப்படி கையாள்வது என்ற அனுபவம் நமக்கு இருக்கும்.

ஆனால் வெளிநாட்டு அணுஉலைகளை கையாளும்போது விபத்தின் போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான முன்னனுபவம் ஏதும் இல்லாத நிலையில் நாம் முறையாகச் செயல்பட முடியாது போகும் வாய்ப்பே அதிகம்! மேலும் அணு உலைகள் குறித்து தீர்மானிப்பது, முடிவெடுப்பது யார் கையில் ஒப்படைக்க கூடாது என வரும்போது அரசுக்கு வேண்டப்பட்டவராகவோ முக்கிய அரசியல் கட்சிகளுக்கு வேண்டப்பட்டவராகவோ, வணிகத்துறையில் முடிவெடுக்கும் அமைப்புகளுக்கு நெருக்கமானவராகவோ இருக்க கூடாது என்றும், அணுசக்தி வல்லுனர்கள் மத்தியில் ஒழுக்கத்தில் தலைசிறந்து விளங்குபவர்கள் மட்டுமே அந்த பதவியில் இருக்க வேண்டும். அப்போதுதான் அணு உலைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு மக்கள் நலன் மேம்படுத்தப்படுவது உறுதியாகும். ஆக கல்பாக்க நிலநடுக்க புள்ளி விவரங்கள் எங்கிருந்து சேகரிக்கப்பட்டன? சாதக பாதகங்கள் அனைத்தும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளதா? சுயேட்சையாக நேர்மையான அணுசக்தி கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் அது உறுதி செய்யப்பட்டதா? என்ற கேள்விகள் நிச்சயம் கேட்கப்பட வேண்டும்.

இனி கல்பாக்கத்தில் துவங்கப்பட உள்ள PFBR (Proto type Fast Breeder Reactor) பற்றி

இந்த வகை அணுஉலைகளில் குளிர்விப்பானாக Liquid Sodium (திரவ சோடியம்) பயன்படுத்தப்படுகிறது. பிரச்சனை என்னவெனில் திரவ சோடியம், காற்று, நீரின் தொடர்பிருந்தால் போதும், அது உடனே வெடித்து எரியும் இதை Sodim Fire என்பர். ஜப்பானில் Monju என்னுமிடத்தில் கல்பாக்கம் போன்ற அணு உலையில் நிலநடுக்கம் காரணமாக Sodium Fire ஏற்பட்டதால் 15 வருடங்களுக்கு மேலாக இன்னமும் திறக்கப்படாமல் தான் உள்ளது. ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் ஏகப்பட்ட சோடியம், பயர் விபத்துகள் நடந்துள்ளன. ஆக நிலநடுக்கத்தின் மையம் கல்பாக்க அணு உலைகளுக்கு அருகில் இருந்தால் PFBR அணு உலையின் குளிர்விக்கும் வழிமுறைகள் செயலிழக்க வாய்ப்பே இல்லையா? விடை தெளிவாக கூற முடியாது. ஜப்பானில் நடந்தது போன்று அரிதாக அத்தகையதொரு விபத்து இங்கு நடந்தால் சென்னை, பாண்டிச்சேரி, மக்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? ஆக கேள்விகளுக்கு விடை காண வேண்டிய தருணம் இது! ஆக பொறுப்புணர்வு, அக்கறையுடன் பதில் சொல்லும் கடமை, ஒளிவுமறைவற்றத் தன்மை, குடிமக்கள் சுயேட்சையாக கதிர் வீச்சுக் குறித்தான அறிவியல் ரீதியான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அவை தான் அணு உலையின் பாதுகாப்பையும், மக்கள் நலனையும் உறுதி செய்யும்!

சில முக்கிய குறிப்புகள்

வெளிநாட்டு அணுஉலைகளை வாங்கும்போது போட்டியின்றி தேர்ந்தெடுப்பது கூடாது. ஆனால் இந்திய அரசோ இதைக் கடைப்பிடிக்கவில்லை. இத்தகைய போக்கு மக்கள் நலனை புறந்தள்ளும் அரசு, முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள், பெரு வணிக குழுமங்கள், அதிகாரம் படைத்த வணிகத்துறையினர்… இவர்களின் கூட்டுச் சதிகளுக்கே, பல்வேறு ஊழல்களுக்கே வழிவகுக்கும்.

2008 செப்டம்பர் 10ல் இந்திய அரசு அமெரிக்க அரசுக்கு 10,000 மெகாவாட் உற்பத்தி செய்வதற்கான அணு உலைகளை அமெரிக்காவிடமிருந்து வாங்கும் என்ற உத்தரவாதம் FAX மூலம் அனுப்பியதன் பின்னரே அமெரிக்காவிலும், பின்னர் இந்தியாவிலும், அணுசக்தி இழப்பீட்டுத் தொகை மசோதா ஆளும் கட்சி, எதிர் கட்சி ஆதரவுடன் இந்தியாவிற்கு அமலில் வந்தது. இம்மசோதாவில் இயற்கை இடர்பாடுகளால் அணு உலைகளில் விபத்து நடந்தால் இழப்பீட்டு தொகை ஏதும் வழங்க தேவையில்லை என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நாம் இன்னமும் ஏற்கத்தான் போகிறோமா? சிந்தித்து செயல்பட வேண்டிய நேரமிது.

ஜப்பானில் அணு உலை பாதிப்பின் காரணமாக 20 கி.மீ. சுற்றளவிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிரீன்பீஸ் செய்த ஆய்வில் விபத்து நடந்த அணு உலையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலுள்ள கிராமத்தில் கதிர் வீச்சின் அளவு 10 மைக்ரோ சீவெட்/hour என இருப்பது கண்டறியப்பட்டது. அப்பகுதி மக்கள் அதன் காரணமாக சில தினங்களிலேயே சர்வதேச அணுசக்தி அறிவியல் குழுக்கள் பரிந்துரைத்த கதிர்வீச்சின் அளவை உள்வாங்கி விடுவர் என்பதன் காரணமாக ஜப்பானிய அரசு மக்கள் நலன் கருதி 40 கி.மீ. வரை உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துமாறு விண்ணப்பங்கள் வந்த வண்ணம் உள்ளது. அரசு தலை சாய்க்குமா? இங்கே சுயேட்சையாக செயல்படும் கிரீன்பீஸ் போன்ற அமைப்பினரின் பங்கு எவ்வளவு தூரம் முக்கியம் வாய்ந்ததென மக்கள் உணர்ந்து செயல்படுவது நல்லது.

ஒரே இடத்தில் பொருளாதார நிதிநிலை காரணமாகவும், வசதி காரணமாகவும் அணு உலைகளை அதுவும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மெகாவாட் அளவில் உற்பத்தித் திறன் கொண்ட அணு உலைகளை அமைப்பது எவ்வளவு ஆபத்தானதாக முடியும் என்பதையும் உணர்ந்து அதைக் கேள்விக்குள்ளாக்குவது தேவையாகிறது. (உ.ம் ஜெய்தாபூர், கல்பாக்கம்)

பாடம் : இயற்கையை மதித்து நடப்பதுதான் மக்களுக்கு நல்லது, பாதுகாப்பானது.

 **** 

*தென்கொரிய நாட்டில் சமீபத்தில் மழை பெய்த போது அவ்வரசு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்தது. மழையின் காரணமாக கதிர்வீச்சு குழந்தைகளை பாதிக்கக்கூடும் என்பதாலேயே இந்த நடவடிக்கை. ஜப்பானிலிருந்து இந்தியாவிற்கு வரும் காற்றுப் பாதையில்தான் தென்கொரியா உள்ளதை மனதில் கொள்ள வேண்டும். அப்படியெனில் இந்தியாவிற்கும் காற்று வழி பாதிப்பு இருக்காதா?

*10.4.11 செய்தி, தீப்புகை அபாய எச்சரிக்கை காரணமாக கர்நாடகாவிலுள்ள கைப்கா 3ஆம் அணு உலை மூடப்பட்டது. பின்பு செய்த ஆய்வில் எந்த சிக்கலும் இல்லை என தெரியவந்துள்ளது. (திரு.குப்தா, இயக்குநர், கைய்கா அணுமின் நிலையம்) தீப்புகை அபாய எச்சரிக்கை பொய்யான எச்சரிக்கை என ஒரு செய்தித்தாள் செய்தி வெளியிட்டது. ‘பொய் எச்சரிக்கை’ எனில் ஏன் அணு உலையை மூட வேண்டும். ‘சிக்கல்’ ஏதும் இல்லையெனில் ‘தீப்புகை எச்சரிக்கை’ ஏன் ஒலிக்க வேண்டும்? அணு உலையை ஏன் மூட வேண்டும்? ஆக ஒளிவு மறைவற்ற தன்மை இவ்வளவு உலக விசயங்கள் நடந்த பின்னரும் அணுசக்தி நிர்வாகத்திற்கு இல்லை என்பதற்கான சமீப உதாரணம் இது. மக்கள் மேலும் விழிப்புடன் இருக்க வேண்டிய கட்டாயத்தை இது நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.

*2.4.11 அன்று அணு உலை பிரச்சனை சிறியதுதான் என திரு.குப்தா ஒப்புக் கொண்டுள்ளார்.

*2004 சுனாமிக்கு பின் தமிழ்நாட்டில் கூடங்குளத்து அணுமின் நிர்வாக அதிகாரிகள் அணுஉலை கடல் மட்டத்திலிருந்து 5 மீட்டர் உயரத்தில் உள்ளதென தெரிவித்தனர். ஜப்பானில் ஏற்பட்ட பாதிப்பிற்கு பின் அது 10 மீட்டர் உயரத்தில் உள்ளதென கூறுகின்றனர். இதில் எது உண்மை என அறிய பொது மக்களுக்கோ, சுயேச்சையாக இங்கும் அறிவியலாளருக்கோ வாய்ப்பு மறுக்கப்படும் நிலையில் அணுசக்தி நிர்வாகத்தின் கூற்றை மக்கள் எப்படி நம்ப முடியும்?

* புகுஷிமா அணுஉலை விபத்து உலகிலே மிக மோசமான 1986ல் நிகழ்ந்த செர்னோபிள் விபத்துக்கு இணையாக உள்ளதென ஜப்பானிய அரசே அறிவித்ததிலிருந்து அணு உலைகளின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமான விசயம் என்பது சொல்லாமலே விளங்கும்.

 ****

 

 

 

 

சென்னை துறைமுகத்தில் ஜப்பானின் கதிர்வீச்சு கலந்த நீர்

புகுஷிமா விபத்தில் 55 மில்லியன் லிட்டர் கடல்நீர் அணு உலை விபத்திற்குப் பிறகு அதைக் குளிர்விக்க பயன்படுத்தப்பட்டது. மீண்டும் கடல்நீர் கடலில் விடப்பட்டது. ஜப்பானில் இருந்து வரும் கப்பல்கள் இக்கடல் நீரை கப்பலின் அடியில் கொண்டு வந்து சென்னை துறைமுகத்தில் கலந்துவிட்டதாக நடுவண் கடல் ஆய்வு நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. (மே 22 2011 அருண் ஜனார்த்தனன்) மாதத்திற்கு நான்கு ஜப்பான் கப்பல்கள் வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீனா மற்றும் ஐரோப்பிய துறைமுகங்களுக்கு ஜப்பானிய கப்பல்கள் வருவது குறித்து அபாயச் செய்தி வெளியிட்டுள்ளனர். இந்தியா இந்த அபாயத்தை வலியுறுத்தவில்லை. ஆனாலும் கோவாவிற்கு வந்த கப்பல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு தொலைதூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் கதிர்வீச்சு தண்ணீர் கலந்துள்ளதா என்பதை ஆய்வு செய்து தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை.

நன்றி – கீற்று.

 

வளர்ச்சி -மக்களுக்கா, முதலாளிகளுக்கா ? -தமிழ்க்குமரன்.

வளர்ச்சிமக்களுக்கா, முதலாளிகளுக்கா ?

தமிழ்க்குமரன்-.

மொத்த தேசிய உற்பத்தி என்பது எப்படி ஏமாற்றும் தன்மை கொண்டது என்பது குறித்து நானும் க்ளேடினும் வெளிப்படையாக பேசிக் கொள்வோம் .பெரும்பாலான மக்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி இருந்தாலும், ஒரே ஒருவர் லாபமடைந்தாலும் கூட நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி வளர்சியடையக்கூடும் .பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவார்கள்,ஏழைகள் மேலும் எழைகளாவார்கள்.ஆனால் புள்ளி விவரங்கள் பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததாக காட்டும்”.

இரண்டு முக்கியமான நோக்கங்களை அடிப்படையாக கொண்டு நான் செயலாற்ற வேண்டுமென்றாள் அவள்.முதலாவது ,நாடுகளுக்கு மிகப்பெரிய அளவிற்கு கடன் வழங்கி அந்த பணத்தை பெரும் கட்டுமான திட்டங்கள் மூலம் மெயின் பெக்டெல் ஹாலிபர்டன் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் கைப்பற்றி திரும்பவும் அமெரிக்காவிற்கு கொண்டு வருவதை நியாயப்படுத்த வேண்டும் .இரண்டாவது ,கடன் வாங்கிய நாடுகளை போன்டியாக்குவதற்க்கு நான் வேலை செய்ய வேண்டும் (அதாவது மெயினுக்கும் மற்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்த பிறகுதான்)அப்படி அவற்றை ஓட்டாண்டி ஆக்கினால்தான் அவை எப்போதும் கடன்காரர்களுக்கு கட்டுப்பட்டு கிடக்கும் .ராணுவதளங்களோ ,எண்ணெய் போன்ற இயற்கை வளங்களோ ,அய்.நா .சபையில் ஒட்டுக்களோ தேவைப்படும் போது இந்த கடன் வலையில் விழுந்துவிட்ட நாடுகளால் மறுக்க முடியாது” . 

எல்லா புதிய மின் நிலையங்களும்,விநியோக வசதிகளும் நிர்மாணிக்கப்பட்ட பிறகு இந்த நாட்டின் பொருளாதாரம் காளான் போல திடீரென்று வளர்ந்துவிடும் என்று நம்பச்செய்யும் வகையில் நீ பொருளாதார முன்னறிவிப்புகள் செய்ய வேண்டும் “. 

சில நேரங்களில் ஒரு நாட்டிற்க்கு நவீன மின் உற்பத்தி கருவிகள் அமைக்க கடன் வழங்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருக்கும் .அந்த நேரங்களில் இந்த கடனால் நல்ல பொருளாதார வளர்ச்சி ஏற்ப்படும் என்று நிருபித்து காட்டுவது என் பொறுப்பாகும் .இதன் பொருள் பொருளாதார வளர்ச்சிக்காகதான் கடன் வழங்கப்படுகிறது என்று நம்பச்செய்வதுதான் .மொத்த தேசிய உற்பத்தியில் மிக அதிக அளவு வளர்ச்சியை காட்டும் திட்டமே அங்கீகரிக்கப்படும் .ஒரு வேலை ஒரே ஒரு திட்டம்தான் பரிசீலனையில் உள்ளது என்றல் அந்த திட்டத்தின் காரணமாக நாட்டின் உற்பத்தி உச்சகட்ட வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்று நான் நிருபித்து காட்ட வேண்டியிருக்கும் .. 

-ஜான் பெர்கின்ஸ்-ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்”

                இந்தியாவில் 40 லட்சம் கோடி ரூபாய்கள் அளவிற்கு 60 -லிருந்து 70 அணு உலைகள் வரை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொகை அமெரிக்க, ரஷ்ய ,பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடனாக தரவிருக்கின்றன .தொழிற்நுட்பங்கள் ,கட்டுமானங்கள் எல்லாமே இவர்கள் நாட்டை சேர்ந்த நிறுவனங்களுக்கு சொந்தமானதுதான் .கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிரான போராட்டம் வெற்றியடைந்தால் இந்த உலக ஏகாதிபத்தியங்கள் 40 லட்சம் கோடி பெறுமானமுள்ள வர்த்தகத்தை இழக்கும் .இந்திய அரசு கூறும் வளர்ச்சி யாருக்கானது? ,ஏன் மக்களுக்கு ,நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக இருந்தாலும் இந்த திட்டங்களை நிறைவேற்ற இந்த அரசு முனைப்புடன் நிற்கிறது .இவைகள் குறித்த விரிவான பார்வையே இந்த கட்டுரை 

 இன்றைக்கு மக்களின் மீது பல வழிகளில் அடக்குமுறைகள் ஏவப்பட்டு வருகின்றன .இந்த அடக்குமுறைகள் மக்களின் குரல்வளையை நெரித்து அவர்களின் உரிமைகளை பறித்து வெறும் நடைபிணங்களாக உலவவிடுகிறது .மக்களின் மீது ஏவப்படும் அனைத்து ஒடுக்குமுறைகளையும் இன்று முன்னின்று நடத்துவது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளாக இருப்பதுதான் கவனிக்கபட வேண்டிய முக்கியமான விடயமாகும் .இந்த அரச பயங்கரவாதமானது சகல விதமான அதிகாரங்களையும் அடக்குமுறை சாதனங்களையும் ,பலமான கூலிபடையையும் வைத்துகொண்டு மக்களை ஒடுக்கி வருகிறது .மக்களை ஒடுக்கவும் முதலாளிகளின் பணப்பைகளை நிறைக்கவும் அரசு இன்று கையில் எடுத்திருக்கும் வழிதான் தேசிய வளர்ச்சி என்னும் முழக்கம் . இந்த ஒடுக்குமுறை அரசு அதன் வல்லரசிய கனவுகளின் பால் மோகம் கொண்டு வளர்ச்சி என்னும் பெயரால் மக்களை ,மக்கள் கோரிக்கைகளை நசுக்கி வருவதற்கு இந்த வளர்ச்சி முழக்கம்தான் முன்னணியில் நின்று அவர்களுக்கு உதவி செய்து வருகிறது .ஆனால் இந்த வளர்ச்சி மக்களுக்காக என்று தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது .மக்களிடையே இந்த வளர்ச்சி வெறியூட்டல் தொடர்ந்து நடை பெறுவதும் ,இந்த தோற்றத்தை துணைகொண்டு அரசு நடத்தும் ஒடுக்குமுறையும் ஒரு கட்டத்தில் வளர்ச்சி பயங்கரவாதமாக உருவெடுக்கிறது . 

வளரும் நாடுகளை பொருளாதார ரீதியாக தொழில்நுட்ப ரீதியாக ,அரசியல் ரீதியாக ,சமுக ரீதியாக வளர்ந்த நாடுகளின் அடிமைகளாக மாற்றுவதற்கு இந்த வளர்ச்சி முழக்கங்களே முன்னின்று உதவுகிறது . உலகமயமாக்கல் ,தாரளமயமாக்கல் என்னும் பெயரிலும் பன்னாட்டு நிறுவனங்கள்,அந்நிய மூலதனம் என்னும் வடிவிலும் ஒரு நாட்டினுள் நுழைந்து அந்த நாட்டினுள் உள்ள மூல வளங்கள் ,இயற்கை வளங்கள் ,வாழ்வாதாரங்கள்,நீர் நிலைகள் மற்றும் கனிம வளங்கள் ஆகிய அனைத்தையும் விழுங்க துவங்குகிறது .பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்கும் சுரண்டுவதற்கும் இந்த அரசு அனைத்து உதவிகளையும் முன்னின்று செய்து தருகின்றது .அந்த திட்டங்களை மக்களிடம் தேசிய வளர்ச்சிக்கான திட்டங்கள் என்று பிரச்சாரமும் செய்கிறது  அணைகள் ,அணு மின் நிலையங்கள் ,துறைமுகங்கள் ,பாலங்கள் ,சாலைகள் இன்னும் பல பெயரில் அறிவிக்கப்படும் வளர்ச்சி திட்டங்கள் மக்களுக்கு என்று சொல்லபடுகிறது ஆனால் உண்மையாக அவை பன்னாட்டு நிறுவங்களின் வசதிக்காகவே அமைக்கபடுக்கிறது .ஆனால் பறிபோவது என்னவோ மக்களின் சொத்துக்கள்தான் .இன்னொரு பக்கம் செய்தி தாள்களும் ,தொலைகாட்சிகளும் ,கருத்து பரப்புவோர்களும் ,அறிவு ஜீவிகளும் அரசின் ஊதுகுழல்களாக இந்த வளர்ச்சி பற்றி மிகை கூற்றுகளை மக்களிடையே பரப்பவே வளர்ச்சி வேகமாய் மக்கள் மனதை ஆட்கொள்கிறது .இயற்கையாய் இந்த வளர்ச்சி மக்களுக்கான வளர்ச்சியாய் இல்லாமல் போவதோடு ,இந்த வளர்ச்சி மக்களுக்கு எதிரானதாகவும் மாறுகிறது .

பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்காக தன் நாடு மக்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரங்கள் குறித்த பாதுகாப்பு ,இயற்கை வளங்கள் ,கனிம வளங்கள் மற்றும் கடல் வளங்கள் குறித்த பாதுகாப்பு அனைத்தையும், ஏன்? நாட்டின் மொத்த பாதுகாப்பையே பலி கொடுப்பதுதான் மக்கள் விரோத அரசுகள் வந்தடையும் நிலை .இந்த அரசுகளை ,அரசின் பாதக திட்டங்களை மக்கள் எதிர்க்கும்போது, அரசு மக்களின் மீது பயங்கரவாதத்தையும் ,அடக்குமுறைகளையும் ஏவுகின்றது.இந்த அரச பயங்கரவாதம் வளர்ச்சி என்ற போர்வையில் மக்களின் வாழ்வாதாரங்களை அழிப்பது ,மக்களை அவர்களை வாழ்விடங்களை இருந்து வெளியேற்றுவது ,மக்களின் சமுக,அரசியல் வாழ்வினை சிதைப்பது ,தொடர்ச்சியாக இயற்கை வளங்களை சூறையாடுவது ,சுற்றுப்புற சூழலை நாசமாக்குவது ,மக்களும் மற்ற உயிரினங்களும் வாழ முடியாத ஒரு சூழலை படைப்பது ஆகிய அனைத்து நாச வேலைகளையும் செய்கிறது .இந்த வளர்ச்சி பயங்கரவாதம் தன் கண் முன்னே இருக்கும் சகலத்தையும் நாசம் செய்கிறது. 

உலக அளவில் இன்று வளர்ந்து நிற்கும் நாடுகளான அமெரிக்கா,இங்கிலாந்து,ஜெர்மனி,ஜப்பான்பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் தங்களது காலனி நாடுகளிலிருந்து நீண்டகாலமாக சுரண்டியதன் மூலமாகவே தங்களை வளப்படுத்திகொண்டனர்.அவர்கள் பெற்றிருக்கக்கூடிய வளர்ச்சியினை தக்க வைத்து கொள்வதற்காக அவர்களது ஏக ஆதிக்கத்தை தொடர்ந்து வலுப்படுத்தி கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது ..நவீன காலனியாதிக்கம் என்னும் வடிவம்தான் இன்றைக்கு அவர்களின் சுரண்டலுக்கான வடிவமாக உள்ளது .தொழில்நுட்பம் ,வர்த்தகம் ,உலகில் உள்ள மூல வளங்களை கையகப்படுத்துதல் ,ராணுவ ஆற்றல் ,விஞ்ஞானம் ஆகியவற்றில் விஞ்சி நிற்கும் இந்த முன்னேறிய நாடுகள் மற்ற நாடுகளை வளர்வதை விரும்புவதே இல்லை .நவீன காலனியமயமாக்கல் மற்றும் ஏகபோக வர்த்தக ஆதிக்கத்தின் மூலமாக வளரும் மற்றும் ஏழை நாடுகளின் பொருளாதாரத்தை முழுமையாக ஆக்கிரமித்துவிடுகின்றன .இவர்களது முழுமையான ஆதிக்கத்தினுள் வந்த பின்னர் இந்த வளரும் மற்றும் ஏழை நாடுகள் அவர்கள் சொல்வதை மட்டும் செய்யும் அடிமைகளாக மாற்றபடுகின்றனர் .இந்த அளவுக்கு வளரும் மற்றும் ஏழை நாடுகள் அடிமைப்படுவதற்கு மூல காரணமாக இருப்பது இந்த வளர்ச்சி திட்டங்களே ஆகும் .

வளர்ச்சி திட்டங்கள் பொறுத்த நம்பிக்கையை மக்களிடம் ஊட்டுவதே இதில் முக்கியமான பணியாகும் .அதற்கு அரசு எடுத்து கொள்ளும் கவனம் அதிகமாக இருக்கும்.”இந்தியா வளர்கிறது” ,”தேசம் வளர்ச்சி பாதையில் செல்கிறது” ,”இந்தியா 2020 -இல் வல்லரசு “, போன்ற முழக்கங்கள் அதற்கு பெரிதும் துணை புரிகின்றன .இது போன்ற முழக்கங்களால் போதையேற்றப்பட்ட மக்கள் தங்களுடைய நிலைகளை பற்றி கவலைப்படாமல் ஊடகங்களிலும் ,செய்திதாள்களிலும் ,பள்ளிகளில் சொல்லிதருவதையும் ,அறிவாளிகள் என்று நம்பப்படுவோர் சொல்லுவதையும் உண்மை என்று நம்பும் வண்ணம் மக்கள் பழக்கப்படுத்தபடுகின்றனர் .தேசம் வேண்டுமா ?வேண்டாமா ?என்று கேள்வி எழுந்தால் இந்த கேள்விக்கு இரண்டு பதில் இருக்க முடியாது .ஆனால் இந்த வளர்ச்சி யாருக்கானது என்பதுதான் என்னுடைய கேள்வி ?இந்த வளர்ச்சி திட்டங்கள் பன்னாட்டு ,உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் அவர்களது  தரகர்களுக்கான வளர்ச்சியா ? அல்லது பசியால் பசியால் மடிந்து கொண்டும் ,கல்வியற்றும் ,சுகாதாரமற்றும் ,வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிஞ்சித்தும் இல்லாமல் வாழும் பெரும்பான்மை மக்களுக்கான வளர்ச்சியா ?மக்களுக்கான வளர்ச்சி இல்லை என்பதை நாம் உறுதியாக கூறிவிட முடியும் .ஏனென்றால் இந்தியா வல்லரசாக வேண்டும் என்பது ஆளும் வர்க்கத்தின்,அதன் நலன்களை போற்றும் சில விஞ்ஞானிகளின் ,தனி மனிதர்களின் கனவாக இருக்கலாம் ஆனால் வறுமையில் உழலும் கோடிகணக்கான ஏழை மக்களின் கனவாக ஒருபோதும் இருக்க முடியாது. 

காளான்கள் போல நாடெங்கும் முளைக்கும் அணு மின் நிலையங்கள் ,சிறப்பு பொருளாதார மண்டலங்கள்,தொழிற்பூங்காக்கள் அடிப்படை ,அத்தியாவசியமான தொழிலான விவசாய தொழிலை முற்றிலுமாக நசித்து வருவதை நாம் பார்கின்றோம் .இது கிராமங்களில் சொந்த நிலங்களில் தொழில் செய்த மக்களை அவர்களது நிலங்களில் இருந்து வெளியேற்றி நிறுவனங்களில் கூலி வேலை செய்பவர்களாக மாற்றி விட்டிருக்கிறது .ஏற்கனவே விவசாய கூலிகளாக இருந்தவர்களுக்கு இந்த தொழிற்பூங்காக்கள் ,சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சற்றே ஆறுதலாக இருப்பதாக உணர்கிறார்கள் .ஆனால் இந்த தொழிற்சாலைகள் விவசாய நிலங்கள் ,நீராதாரங்கள் மற்றும் சுற்றுசூழலை கடும் பாதிப்புக்கு உள்ளாக்கிய பின்னர் அவர்களின் வாழ்விடங்கள் நாசமாக்கபட்டுவிட்டன என்பதை உணரும்போது அவர்களால் ஏதும் செய்ய இயலாமல் இருக்கும் என்பதே உண்மை .அவர்கள் இந்த நிலையில் இருப்பதைத்தான் அரசும் விரும்புகிறது.நிலங்களில் இருந்து விவசாயிகள் வெளியேற்றப்பட்டபின் கைவிடப்பட்ட அந்த நிலங்கள் மெல்ல பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களால் கைப்பற்றப்படுகின்றன .ஆபத்து முழுவதும் வந்த பின்னர்தான் தங்களிடம் மிஞ்சி இருந்த சிறிதளவு உரிமைகளும் பிடுங்கப்பட்டு ஏதுமற்ற நிலையில் தங்கள் இருப்பதை மக்கள் உணர்கின்றனர் .இன்னொரு பக்கம் கனிம வளம்.கடல் வளம்,நீர் வளம் மிகுந்து இருக்கும் பகுதிகள் வெளிப்படையாகவே பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்படுவதுடன் ,அந்த பெரும் நிலங்களில் பூர்விகமாக வாழும் மக்களை வெளியேற்றுவதை அரசே முன்னின்று நடத்துகிறது .மக்கள் எதிர்த்து போராடினால் ராணுவத்தை கூட பயன்படுத்தி மக்களை ஒடுக்கி விட்டு நிலத்தை கையகப்படுத்துகிறது .இந்த நாட்டின் மக்களுக்கு சொந்தமான அனைத்து வளங்களையும் இரக்கமற்ற முறையில் சூறையாடுவதுடன்,அதனை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து கொடுப்பதும் இவர்களுக்கு கிடைக்கும் தரகு மற்றும் லஞ்ச பணத்திற்காக என்பதுதான் கொடுமை ..இந்த வளர்ச்சி முழக்கங்களில் முக்கிய பங்கு வகிக்கும் இன்னொரு விடயம்தான் ஒரு நாட்டின் உள்கட்டுமானமாகும்.

இந்த திட்டங்கள் ஒப்பந்தகாரர்களுக்கு மிக அதிகம் லாபம் பெற்று தரக்கூடியவை கடன் பெரும் நாட்டிலுள்ள விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்கார குடும்பங்களுக்கு மேலும் செல்வத்தை அள்ளி தரக்கூடியவை .அதே நேரத்தில் அந்த நாடு தற்சார்பை இழந்து நம்மை சார்ந்து இருக்கும்படி செய்துவிடகூடியது என்ற விடயம் வெளியே சொல்லபடுவதே இல்லை.இப்படி நாடுகளை நம்மை அதாவது அமெரிக்காவை அண்டியிருக்க செய்து அதன் மூலம் அவற்றின் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதுதான் இத்திட்டங்களின் அடிப்படை நோக்கம் என்ற உண்மை வெளிவருவதே இல்லை .எவ்வள்ளவுக்கெவ்வளவு கடன் அதிகமாக உள்ளதோ அவ்வளக்கவ்வளவு நல்லது .அனால் ஏழ்மையில் வாடும் மக்களுக்கு அளிக்கப்படும் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற விடயங்கள்தான் இக்கடன்களை கட்ட பலி கொடுக்கப்படும் என்ற உண்மை மூடி மறைக்கப்படுகிறது” .

-ஜான் பெர்கின்ஸ்-ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்  

உள்கட்டுமானம் என்பது ஒரு நாட்டின் இன்றியமையாத தேவையாகும் .ஆனால் அதற்கான திட்டமிடுதல்கள் மக்கள் நலன்களுக்காக இயற்றப்படுவது இல்லை என்பதுதான் விடயம் .ஒரு சில குடும்பங்கள் அல்லது ஒரு சில நபர்கள் லாபம் அடைவதற்காக திட்டங்கள் தீட்டப்படுகின்றன .இந்தியா எப்படிப்பட்ட நாடு என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.இந்திய துணை கண்டத்தில் அடைபட்டு கிடக்கும் பல தேசங்கள் என்ன நிலையில் இருக்கிறது என்றும் உங்களுக்கு தெரியும்.

நாட்டில் பெரும் அணைகள் கட்டப்படுகின்றன ?ஆனால் விவசாயத்திற்கு ,குடிப்பதற்கு தண்ணீர் கிடைப்பதில்லை அணு மின் நிலையங்கள்,அனல் மின் நிலையங்கள் கட்டப்படுகின்றன ?ஆனால் வீடுகளில் மின்சாரம் இருப்பதில்லை .பெரும் தொழிற்சாலைகள் கட்டப்படுகின்றன ?ஆனால் வேலை இல்லாதோர் கோடிகணக்கில் இருக்கின்றனர்.மிகப்பெரிய சாலைகள் போடப்படுகின்றன ?ஆனால் நாம் என்றோ ஒரு நாள்தான் அவற்றில் பயணிக்கிறோம் .சுற்று சூழல் நாசமாக்கப்படுகின்றன ?நாம் பல நோய்களை பெற்று கொள்கிறோம் .கல்வி தனியார் மயமாக்கப்படுகின்றது ?ஒரு சாரர் கல்வி சுமையினால் கடனாளிகளாகவும் பெரும்பான்மையினருக்கு கல்வி எட்டாததாகவும் இருக்கிறது .கல்வி இல்லை, சுகாதாரம் இல்லை ,நல்ல சுற்று சூழல் இல்லை ,வேலை இல்லை ,மின்சாரம் இல்லை ,நல்ல தண்ணீர் இல்லை ,விவசாயம் இல்லை மேலும் மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை .ஆனால் நாம் வளர்கிறோம் .இந்த வளர்ச்சி பயங்கரவாதம் நம்மை கொல்வதை காட்டிலும் வேறு எதுவும் நம்மை இப்படி கொல்வதில்லை .இந்த நாட்டில் ஒரு சில பணக்காரர்கள் வாழ்வதற்காக, சுகபோகமாக வாழ்வதற்காக நாம் அனைவரும் பலியிடப்படுகிறோம் .நமது வாழ்வில் வளர்ச்சி என்பதை என்றாவது கண்டிருக்கிறோமா ?ஆனால் இந்த நாட்டில் ஒரு சில பணக்காரர்கள் பல நூறு கோடிகளில் வீடு கட்டுவதையும்,பல லட்சகணக்கில் மின்சார கட்டணம் கட்டுவதையும் பார்க்கிறோம் .அவர்கள் வளர்ச்சி பெற நாம் பலியிடப்படுகிறோம் .அவர்களது வளர்ச்சி நமது வீழ்ச்சியிலிருந்து துவங்குகிறது .இந்த வளர்ச்சி வெறிதான் மக்களுடைய எல்லா நலனையும் பலியிடுகிறது .இவர்களின் வளர்ச்சிக்காகத்தான் இந்த அரசு பாடுபடுகிறது .அரசின் உயிர்,உடல் ,இயக்கம் அனைத்தும் அது சார்ந்திருக்கும் வர்க்கத்தின் நலனுக்காகவே இயங்குகிறது .அதன் ராணுவம்,காவல்துறை ஆயுதபலம் கொண்டு இந்த வளர்ச்சி பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் மக்களை கொன்றுபோட என்றுமே அது தயங்கியது இல்லை என்பது வெட்ட வெளிச்சம் .இந்த அதிகார வர்க்கத்தின் வளர்ச்சிக்காக இந்திய அரசு பலியிட்டுள்ள மக்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

பச்சை வேட்டை என்ற பெயரில் காடுகளில் வாழும் பழங்குடி மக்களை வெளியேற்றிவிட்டு வேதாந்தா போன்ற நிறுவனங்களுக்கு கனிமங்களை கொள்ளையடிப்பதற்கான உரிமையும் ,நந்திகிராம் சிங்குரில் விவசாய மக்களை வெளியேற்றிவிட்டு டாட்டா நிறுவனத்திற்கு நிலங்களை கொடுக்க முயற்சி செய்ததும் ,கடல் மேலாண்மை திட்டத்தை போட்டு ஆழ்கடலை தனியார் நிறுவனகளுக்கு திட்டமிட்டதும் ,நொய்டாவில் விவசாய நிலங்களை சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் பறித்தது ,தமிழ்நாட்டின் கூடங்குளம் ,மேற்கு வங்க ஹரிபுரிலும் ,மகாராஷ்டிரா – ஜைடாபுரிலும் அணு மின் நிலையங்கள் அமைத்து அந்த பகுதிகளை நாசமாக்க முயற்சி செய்ததும் இந்திய அரசின்  அப்பட்டமான சுயநலப்போக்கினை வெளிப்படுத்துகிறது இந்த திட்டங்களுக்கும் இன்னும் பல மக்கள் விரோத திட்டங்களுக்கும் எதிராக மக்கள் பெருமளவில் எதிர்ப்பு தெரிவித்தும் ,போராடியும் வருகின்றனர் .அனைத்து நாசகார திட்டங்களையும் அரசு வளர்ச்சி என்கிற போர்வையில்தான் நிகழ்த்தி வருகிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் .

இந்திய அரசிடம் நல்ல திட்டங்களும் இல்லை,பொருளாதாரமும் இல்லை ,தொழில்நுட்பமும்  இல்லை ,நாட்டுக்கு நல்லது செய்யும் அறிவுசார் சமூகமும் இல்லை ஆனால் வல்லரசாக வேண்டும் .இன்றைய நிலையோ அரசை நடத்த பெரும் நிறுவனங்களின் ஆதரவை பெற வேண்டும் .அந்த நிறுவனங்கள் லாபம் அடையும் வகையில் திட்டங்கள் தீட்ட வேண்டும்.அந்த திட்டங்களுக்கு உதவி பெற அமெரிக்காவையோ உலகவங்கியையோ,பன்னாட்டு நிதியத்தையோ வேறு எந்த நாட்டையோ கால் பிடித்து கெஞ்சவேண்டும்.பன்னாட்டு நிறுவனங்கள் தன பெரிய முதலை வாயினை அகல திறந்து கொண்டு காத்திருக்கும்.அவர்கள் கடனை அள்ளி வீசுவார்கள் கடனை மட்டுமல்ல பலவிதமான ஒப்பந்தங்களையும் அதனோடு வீசுவார்கள் .இந்திய அரசு அதனை கவனமாக பிடித்து கொள்ளும் .பின்னர் அயல் நாடு அறிஞர்கள் (பொருளாதார அடியாட்கள் ) திட்டங்களை அள்ளி வீசுவார்கள் ..இந்த திட்டங்களால் நாடு அபார வளர்ச்சி பெரும் என்று நாடு முழுவதும் செய்தி போகும் .அவர்கள் கடன் கொடுப்பார்கள் .தொழில்நுட்ப உதவி செய்வார்கள்,கட்டுமான பணிகளை ஏற்று நடத்துவார்கள் .நீங்கள் அவர்களுக்கு தரவேண்டிய கட்டணங்களை அந்த கடனிலேயே கழித்து கொள்வார்கள்.இறுதியில் கடன் இருக்கும் அதற்கான வட்டி இருக்கும் அது மக்களின் தலையிலே விழும் .இன்னொரு பக்கம் பல பன்னாட்டு நிறுவனங்கள் லாபம் பெறும்.அதோடு இணைந்து பல உள்நாட்டு நிறுவனங்களும் லாபம் பெறும்.இந்திய அரசு தவறாமல் அதன் தரகு,லஞ்ச பணத்தை பெற்றுக்கொள்ளும்.அந்த திட்டங்களின் பயனும் மக்களை சென்று அடையாமல் சில தனியார் நிறுவனங்களை சென்று அடையும்.ஆனால் அந்த கடன் சுமை மட்டும் இந்த நாட்டின் ஏழை எளிய மக்கள் மீது சுமத்தப்படும் .வரிகள் ஏற்றப்படும் ,பேருந்து கட்டணம்,சமையல் எரிவாயு ,மண்ணெண்ணெய் ,உணவு பொருட்கள் .மருந்து மற்றும் அத்தியாவசியமான பொருட்கள் அனைத்தும் விலை ஏறிவிடும் .மதிப்பிற்குரிய இந்த பன்னாட்டு,உள்நாட்டு நிறுவனங்களுக்கு பல வகையில் வரிச்சலுகை,சிறப்பு சலுகை  இன்னும் பல பெயர்களை பல சலுகைகள் வழங்கப்படும் .ஆனால் மக்கள் மீதோ அவர்கள் தலையின் மீது பாரத்தின் மேல் பாரமாக சுமத்தப்பட்டிருக்கும் .இது வளர்ச்சியல்ல இது அடித்தட்டு மக்கள் மீது ஏவிவிடப்படும் பயங்கரவாதமாகும் .இந்த பயங்கரவாதத்தை எதிர்த்து போராட நாம் தயங்காமல் இன்று மக்கள் பல பகுதிகளில் நடத்தும் போராட்டங்களுக்கு ஆதரவு மற்றும் பங்கேற்ப்பினை வழங்க வேண்டும் .

கல்வியறிவு இல்லாமல் பல நூற்றாண்டு காலமாக நாம் ஒடுக்கப்பட்டு வந்தோம் .இன்று இந்தியாவில் 30 % மக்கள் கல்வியறிவு பெறாமல் இருக்கின்றனர் அதாவது 33 கோடி மக்கள்.40 % மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர் அதாவது 44                கோடி மக்கள் .50 % மக்கள் சுகாதார வசதியற்று இருக்கிறார்கள் அதாவது 55 கோடி மக்கள் .இதுதான் வளர்ச்சியா ? மக்களுக்கான வளர்ச்சி நமக்கு வேண்டுமென்றால் சில விடயங்களை நாம் கவனிக்க வேண்டும்.நாம் அரசியல் வேண்டாம் என்கிறோம் ,பணக்கார வர்க்கம் ஆட்சியில் அமர்கிறது .நாம் அமைதியாக வாழ விரும்புகின்றோம் ,இந்த அதிகார வர்க்கம் நம்  வாழ்கையில் புயல் வீசும் வண்ணம் பார்த்து கொள்கிறது .நாம் அணியாய் திரள வேண்டாம் என்று நினைக்கிறோம் ,ஆளும் வர்க்கம் நமக்கு எதிராக அணியாய் திரண்டு நிற்கிறது .நாம் எந்த பக்கம்  திரும்பினாலும் நமக்கெதிரான ஆற்றலாய் இந்த அரச பயங்கரவாதிகளும் ,ஆளும் வர்க்கமும் தான் நிற்கிறது .

நாம் கடந்த காலத்தில் தவறுகள் பல இழைத்திருந்தோம் .அடக்குமுறைகள் நடக்கும் போது எதிர்க்காதிருந்தோம்,பேசாதிருந்தோம் ,பயந்திருந்தோம் ,பலமற்று இருந்தோம் .இன்று நிலைமைகள் மாறி இருக்கின்றன .இன்று நாம் பயந்தவர்களாய் இல்லை .மக்கள் சக்தியின் பலம் என்ன என்பதை உணர்ந்திருக்கிறோம் .வீறு கொண்டு போராடுகிறோம் .தெளிவு பெற்று இருக்கிறோம் .நீண்ட நாட்களாக வளர்ச்சியின் பெயராலும் இன்னும் பலவற்றின் பெயராலும் இந்த அரசு நம்மை ஏமாற்றி வந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு விட்டோம் .அது எப்படியெல்லாம் ஏமாற்றும் ,சூழ்ச்சி செய்யும் ,பிரித்து ஆளும் என்று கூட நாம் இன்று தெரிந்து வைத்திருக்கிறோம் .இன்னும் செய்ய வேண்டியது என்னவென்றால் அரசியலை கற்கவும் ,அணி திரளவும் ,அரசினை எதிர்த்து போராடவும் தெரிந்து கொள்வது மட்டும்தான் .

இந்த அரசு தன்னுடைய வளர்ச்சி வெறியூட்டல்களாலும் ,அமைப்பு பலத்தாலும் கடுமையான பொய் பிரச்சாரத்தை மக்களிடையே நடத்தி வருகிறது .மேலும் அரச பயங்கரவாதத்தையும் ஏவி வருகிறது .இந்த அரச பயங்கரவாதத்தை எதிர்த்து போராடாமல் அதனை ஒழிக்க முடியாது .போராட்ட காலத்தில்,களத்தில் ,நம்மையே அதாவது போராடுபவர்களையே  பயங்கரவாதிகள் என்று இந்த ஆளும் வர்க்கம் முத்திரை குத்தும் ,தூற்றும் ,மிரட்டும் .ஆனால் நாம் தெரிந்துதான் வைத்திருக்கிறோம் இந்த அரசின் புரட்டுகளை,சூழ்ச்சிகளை,பொய்களை. இதற்கு நாம் பலியாகபோவதில்லை .இந்த அரச பயங்கரவாதத்திற்கு எதிராக முன் எப்போதும் இல்லாத அளவில் நாம் தொடர்ந்து இன்னும் கடுமையாக போராடத்தான் போகிறோம் .இந்த போரில் வென்று மக்களுக்கான உண்மையான வளர்ச்சியை வெல்வோம் .அணு உலைக்கு எதிரான போராட்டத்தை ஆதரிப்போம் ,பரமக்குடியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அரசினை எதிர்ப்போம்,மரணதண்டனைக்கு எதிராக போராடுவோம் ,ஈழப்போராட்டத்தை ஆதரிப்போம் ,ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக நடக்கும் அனைத்து போராட்டங்களையும் ஆதரிப்போம். போராடும் மக்களின் பக்கம் நின்று போராடுவோம்.

தமிழ்க்குமரன்-.

நன்றி,

www.desathinkural.org.